Iran attacks Pakistan: பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் அல்-அட்ல் என்ற பயங்கரவாத அமைப்பின் இரண்டு முக்கிய தலைமையகங்களை ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்கி அழித்ததாக ஈரான் அரசு ஊடகம் நேற்று பின்னிரவில் தெரிவித்தது. பாகிஸ்தான் நாட்டின் வான்வெளியில் ஈரான் நடத்திய இந்தத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஈரானின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆனால், டெஹ்ரானை எதிர்க்கும் குழுக்களில் ஒன்றான ஜெய்ஷ் அல்-அட்ல் (Jaish al Adl) என்ற தீவிரவாதக் குழு, ஈரானிய பாதுகாப்பு படைகள் மீது பல தாக்குதல்களை நடத்தியதாகவும், அந்த அமைப்பை அடக்குவதற்காகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தானில், ஜெய்ஷ் அல்-அட்லின் "தலைமையகம்" அமைந்துள்ள பகுதியில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | திக்குமுக்காடும் ஏமன்; அமெரிக்காவும் இங்கிலாந்தும் இணைந்து தாக்குதல் -முழு பின்னணி
ஜெய்ஷ் அல்-அட்ல் என்ற் வார்த்தையின் பொருள், ‘நீதியின் இராணுவம்’ என்பதாகும்.2012 இல் உருவாக்கப்பட்ட சுன்னி போராளிக் குழுவான Jaish al Adl, "பயங்கரவாத" அமைப்பு என ஈரான் கூறுகிறது. இந்த அமைப்பு, தென்கிழக்கு மாகாணமான சிஸ்தான்-பலூசிஸ்தானில் இயங்குகிறது என்று அல் அரேபியா வெளியிட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
Iran says it has launched attacks on what it calls militant bases in Pakistan, reports AP.
— ANI (@ANI) January 16, 2024
பல ஆண்டுகளாக ஈரானிய பாதுகாப்புப் படையினருக்கு எதிராக மேற்கொண்ட பல தாக்குதல்களுக்கு இந்தக் குழு பொறுப்பேற்றுள்ளது. கடந்த டிசம்பரில், ஜெய்ஷ் அல்-அட்ல், சிஸ்தான்-பலூசிஸ்தானில் உள்ள ஒரு காவல் நிலையத்தைத் தாக்கியதில் குறைந்தது 11 காவலர்களைக் கொன்றதாக அல் அரேபியா செய்திகள் தெரிவிக்கின்றன.
சிஸ்தான்-பலுசிஸ்தான் பகுதி, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. ஈரானின் பாதுகாப்புப் படையினருக்கும் சன்னி போராளிகளுக்கும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் இடையே இந்தப் பகுதியில் அடிக்கடி மோதல்கள் நடைபெறுவது இயல்பான ஒன்றாக உள்ளது.
மேலும் படிக்க | யார் இந்த குர்பத்வந்த் சிங் பன்னுன்? இவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு?
சிஸ்தான்-பலூசிஸ்தான் ஈரானின் ஏழ்மையான பகுதிகளில் ஒன்றாகும், இந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் சுன்னி இன பலுச்சிகள் என்று அல் அரேபியா ஊடைக வெளியிட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேலிய "உளவு தலைமையகம்" மற்றும் சிரியாவில் ISIS-யுடன் தொடர்புடைய இலக்குகள் மீது ஈரானின் புரட்சிகர காவலர்கள் ஏவுகணைகளை வீசி தாக்கிய ஒரு நாளுக்குப் பிறகு பாகிஸ்தானில் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது.
தற்போது பல மாதங்களாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர், உலக அளவில் போர்ச்சூழலை உருவாக்கியுள்ள நிலையில், பாகிஸ்தான் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதல் சர்வதேச அளவில் பதற்றத்தை கூட்டியுள்ளது. ஈரனின் மோதல் போக்கு அதிகரித்து வருவதாக சர்வதேச நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அண்மையில் ஈராக், சிரியா மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டிருந்தது. இந்த சூழலில் பாகிஸ்தானை தாக்கியுள்ளது கவலைகளை அதிகரித்துள்ளது.
லும் படிக்க | ஆணுறுப்பை அறுத்துக்கொண்ட பாதிரியார்... பொறுத்து பார்த்தும் முடியவில்லை - என்ன பிரச்னை?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ