டிஜிட்டல் மயமாக்கல் இந்தியாவில் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது: IMF

இந்தியப் பொருளாதாரம் குறித்த சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கையில், டிஜிட்டல் மயமாக்கல் இந்தியாவில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 13, 2022, 05:30 PM IST
  • டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக, இந்திய அரசால் பல விஷயங்களை எளிதாக நிறைவேற்ற முடிந்தது.
  • 10,000 பில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற லட்சிய இலக்கை அடைய இந்தியா குறிப்பிடத்தக்க கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
  • டிஜிட்டல் முயற்சிகள் மூலம் அரசாங்கத்தை எளிதில் அணுகும் வழி பிறந்துள்ளது.
டிஜிட்டல் மயமாக்கல் இந்தியாவில் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது: IMF title=

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைமைப் பொருளாதார நிபுணர் பியர் ஆலிவர் கோரிஞ்சஸ், டிஜிட்டல் மயமாக்குவதற்கான இந்தியாவின் முயற்சிகளைப் பாராட்டியுள்ளார். இந்த நடவடிக்கை நாட்டில் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது என்றார்.  இதனால், பல திட்டங்களை அமல்படுத்துவதில் உள்ள சவால்களை  சமாளிப்பதிலும், எளிதாக திட்டங்களின் பயன்களை அனைவருக்கும் கொண்டு சேர்க்கவும், இந்திய அரசாங்கத்திற்கு சாத்தியமாக்கியுள்ளது என்று அவர் கூறினார்.

இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகள் பற்றிப் பேசிய கோரிஞ்சஸ், "டிஜிட்டல்மயமாக்கல் பல அம்சங்களில் உதவியாக உள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில், அனைவருக்கும் வங்கி கணக்கை ஏற்படுத்தி, நேரிடையாக, வங்கி கணக்கில் பணம் செலுத்துவதன் மூலம், நொடியில், ஏராளமானாருக்கு பணம் பலன்கள கிடைத்து பயனடைகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

பியர் ஆலிவர் கோரிஞ்சஸ் மேலும் கூறுகையில்,  ‘டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக, இந்திய அரசால் பல விஷயங்களை எளிதாக நிறைவேற்ற முடிந்தது, இல்லையெனில் மிகவும் கடினமாக இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். ஆம், நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. இது நிச்சயமாக வரவேற்கத்தக்கது. மேலும் நவீன பொருளாதாரத்திற்கு மக்களை கொண்டு வருவதற்கு இது மிகப் பெரிய உதவியாகும். இது வளர்ச்சிக்கான உந்து சக்தியாகும்’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | ஹிஜாப் விவகாரம்: கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

IMF தலைமைப் பொருளாதார நிபுணர் மேலும் கூறுகையில், "இந்தியாவின் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த டிஜிட்டல் முயற்சிகள் மூலம் அரசாங்கத்தை எளிதில்  அணுகும் வழி பிறந்துள்ளது. முன்னதாக அரசை அணுகி பிரச்சனைகளுக்கான தீர்வை பெறுவது என்பது சவாலானதாக இருந்தது"  என்றார். உலகின் பல நாடுகள் மந்தநிலை காரணமாக நெருக்கடியை எதிர்கொள்ளும் நேரத்தில், இந்தியா தடைகளை தகர்த்து பிரகாச ஒளி போல் வெளிவந்துள்ளது என்று கோரிஞ்சஸ் கூறினார். 10,000 பில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற லட்சிய இலக்கை அடைய இந்தியா குறிப்பிடத்தக்க கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றார். அப்படி செய்தால் இந்த இலக்கை அடைய முடியும் என்றார்.

பியர் ஆலிவர் கோரிஞ்சஸ் மேலும் கூறுகையில், 'கடந்த காலங்களில் பல நாடுகள் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆம், இது எளிதான காரியம் அல்ல, இந்தியா போன்ற பொருளாதாரத்திற்கு அபரிமிதமான ஆற்றல் உள்ளது, ஆனால் அதன் இலக்கை அடைய, இந்தியா பல கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். கோரிஞ்சஸ் மேலும் கூறுகையில், 'பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இது 6.8 அல்லது 6.1 என்ற திடமான  வளர்ச்சி விகிதத்துடன் வளரும். அதுவும் மற்ற பொருளாதாரங்கள், வளர்ந்த பொருளாதாரங்கள் அந்த வேகத்தில் வளராத நேரத்தில் இந்தியா இதனை சாத்தியமாக்கியுள்ளது எனக் கூறினார்.

மேலும் படிக்க | எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.22 ஆயிரம் கோடி மானியம்; பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு!

மேலும் படிக்க | டெங்குக் காய்ச்சல் சிகிச்சைகள்! இந்த அறிகுறி இருந்தால் எச்சரிக்கை அவசியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News