ஐநாவில் ரஷ்யாவின் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கையை இந்தியா நிராகரித்தது ஏன்?

India vs Russia at UN: ஐநாவில் உக்ரைன் விவகாரத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ரஷ்யாவின் கோரிக்கையை இந்தியா நிராகரித்தது 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 11, 2022, 11:00 AM IST
  • உக்ரைன் விவகாரத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படாது
  • ரஷ்யாவின் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை தோல்வி
  • ரஷ்யாவின் கோரிக்கையை இந்தியாவும் நிராகரித்தது
ஐநாவில் ரஷ்யாவின் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கையை இந்தியா நிராகரித்தது ஏன்? title=

India vs Russia at UN: ஐநாவில் உக்ரைன் விவகாரத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ரஷ்யாவின் கோரிக்கையை இந்தியா நிராகரித்தது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் கலந்துக் கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது, ரஷ்யா-உக்ரைன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாட்டை வெளியிட அவர் மறுத்துவிட்டார். எனினும், ‘போர்’ என்ற கருத்தை இந்தியா ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

உக்ரைனில் நான்கு பிராந்தியங்களை மாஸ்கோ இணைத்ததைக் கண்டிக்கும் வரைவுத் தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ரஷ்யாவின் கோரிக்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது. திங்களன்று (அக்டோபர் 10), 193-UNGA உறுப்பினர்கள், உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க், கெர்சன், லுஹான்ஸ்க் மற்றும் ஜபோரிஜியா பகுதிகளை சட்டவிரோதமாக இணைத்ததற்காக ரஷ்யாவைக் கண்டிக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற திட்டமிட்டனர்.  

ஐநா பொதுச் சபையில் ரஷ்யா ரகசிய வாக்கெடுப்பை கோரியதற்கு இந்தியா உட்பட 107 உறுப்பினர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ரஷ்யாவின் கோரிக்கைக்கு ஆதரவாக 13 நாடுகள் மட்டுமே வாக்களித்தன, மீதமுள்ள 39 நாடுகள் வாக்களிக்கவில்லை. ரஷ்யாவும் சீனாவும் வாக்களிக்காத நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர்; தொடரும் ரஷ்ய தொழிலதிபர்களின் மர்ம மரணங்கள்!

ரஷ்யாவின் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பிறகு, இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ரஷ்யா கோரியது. ஆனால், ரஷ்யாவின் இந்த கோரிக்கை மறுபரிசீலனை செய்யவில்லை, இந்தியா உட்பட 100 நாடுகள் 'மறுபரிசீலனைக்கு' எதிராக வாக்களித்தன. 16 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன, 34 நாடுகள் வாக்களிக்கவில்லை. 

ரஷ்யா - உக்ரைன் மோதலை இந்தியா இதுவரை கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐ.நா.சபையின் ரஷ்யாவின் நிரந்தர உறுப்புரிமை, ஐ.நா.சபையின் தலைவர் முக்கிய பங்கு வகித்த மோசடிகளுக்கு ஐ.நா.உறுப்பினர் சாட்சியாக மாறியுள்ளது என்று கூறியுள்ளது. "ஒழுங்குநிலையை உருவாக்க எங்களுக்கு தளம் வழங்கப்படவில்லை எங்கள் அறிக்கை சிதைக்கப்பட்டது, இப்போது ஐ.நா. உறுப்பு நாடுகள் தங்கள் கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமையைப் பறிக்கின்றன" என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்ய தூதர் வாசிலி நெபென்சியா தெரிவித்தார்.

மேலும் படிக்க | ‘எங்களை அழிக்க முயற்சி’ - உக்ரைன் மீதான ஏவுகணை தாக்குதல் குறித்து அதிபர் ஜெலென்ஸ்கி

"இது பொதுச் சபை மற்றும் ஒட்டுமொத்த ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒரு முன்னோடியில்லாத நடவடிக்கை ஆகும். நிச்சயமாக, இதுபோன்ற சூழ்நிலைகளில் நாங்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை" என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்ய தூதர் வாசிலி நெபென்சியா தெரிவித்ததாக PTI செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தைத் தொடர்ந்து, ரஷ்யாவை 'பயங்கரவாத நாடு' என்று உக்ரைன் சாடியது. "இது ஒரு பயங்கரவாத அரசு என்பதை ரஷ்யா மீண்டும் நிரூபித்துள்ளது, வலுவாக இவர்கள் தடுக்கப்பட வேண்டும்." அவர்  ஐ.நாவுக்கான உக்ரைனின் தூதுவர் கூறினார்.

மேலும், "துரதிர்ஷ்டவசமாக, நிலையற்ற மற்றும் பைத்தியக்காரத்தனமான சர்வாதிகாரம் இருக்கும் வரை நீங்கள் ஒரு நிலையான மற்றும் நல்ல அமைதிக்கு அழைப்பு விடுக்க முடியாது" என்று அவர் கூறியதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீதான மாஸ்கோ படையெடுப்பு தொடங்கி ஆறு மாதங்கள் முடிந்துவிட்டன. எப்போது போர் முடிவுக்கு வரும் என்று அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர்: ரஷ்யா - கிரிமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தின் ஒரு பகுதி தகர்ந்தது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News