இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ராக் கானின் அரசியல் கட்சியான பாகிஸ்ஹான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) ஆட்சியை தக்க வைக்கும் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை. எனினும், இம்ரான் கானுக்கு எதிராக, எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றுவதில் வெற்றி அடைந்துவிட்டால், அதை சமாளிப்பதற்கான ஒரு மாற்று திட்டத்தையும் இம்ரான் கானின் கட்சி வகுத்துள்ளது.
பி.டி.ஐ நாட்டில் வழக்கமான நேரத்திற்கு முன்னதாகவும், உடனடியாகவும் தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனிடம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் மின்னணு வாக்களிப்பு மற்றும் வெளிநாட்டு பாகிஸ்தானியர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்களை தேசிய சட்டமன்றம் (என்ஏ) அங்கீகரிக்க தன்னாலான பணிகளை செய்யவும் கட்சி முடிவெடுத்துள்ளது.
மேலும், வருங்கால அரசுக்கு எதிராக பெரிய அளவிலான கண்டனப் போராட்டத்தையும், மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு மக்கள் ஆதரவை திரட்டும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தையும் ஆளும் கட்சி மேற்கொள்ளும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் மாவட்டங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்றும், அனைத்து மட்டங்களிலும் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | நீங்கள் பிரதமராகாமல் இருந்திருந்தால்?..இம்ரான் கானை சாடிய முன்னாள் மனைவி
கருத்து வேறுபாடுள்ள உறுப்பினர்களுக்கு தேர்தலில் டிக்கெட் வழங்கப்படாது
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் பழைய மற்றும் விசுவாசமான உறுப்பினர்களுக்கு மட்டுமே தேர்தலில் கட்சி டிக்கெட்டுகளில் போட்டியிட அனுமதி அளிக்கப்படும் என்றும், கருத்து வேறுபாடுள்ள உறுப்பினர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என்றும் கட்சி வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
மேல்மட்டத்தில் இருந்து யூனியன் கவுன்சில் நிலை வரை ஒரு ஒருங்கிணைந்த கட்டமைப்பு உருவாக்கப்படும் என்று அவர்கள் மேலும் கூறியதாக தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் மாகாண சபைகளில் இருந்து உடனடியாக ராஜினாமா செய்ய மாட்டார்கள். மாறாக, சூழ்நிலைகள், கூடுதல் ஆதாரங்களின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு அச்சுறுத்தல் பற்றி மக்களுக்கு தெரிவிக்கும் பிரச்சாரம்
"வெளிநாட்டு அச்சுறுத்தல்" பற்றியும் அதில் எதிர்க்கட்சிகளின் பங்கு குறித்தும், கடந்த மூன்றரை ஆண்டுகளில் அரசாங்கத்தின் செயல்திறன் பற்றியும் மக்களுக்கு தெரிவிக்க ஒரு பிரச்சாரத்தை தொடங்குவதாகவும் கட்சி தெரிவித்துள்ளது.
இம்ரான் கான் வலுக்கட்டாயமாக பதவியிலிருந்து நீக்கப்பட்டால், அவர் தனது அரசாங்கத்திற்கு எதிரான சதிகள் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மட்டங்களிலும் போராட்ட குணம் படைத்த உறுப்பினர்களை புறக்கணிக்கும்படியும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.
அடுத்த தேர்தலில் கட்சி வெற்றி பெறுவதற்கான தெளிவான வாய்ப்பை உறுதிசெய்யும் வகையில், உடனடியாக பொது மக்கள் பரப்புரையை கட்சி தொடங்கும் என்றும் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க | தோல்வியை ஏற்காமல், என் வாழ்நாள் முழுவதும் போராடினேன்: இம்ரான் கான்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR