கடற்கரையில் பிரம்மாண்ட மர்ம பொருள்... சந்திரயான்-3 உடையாதா - முழு விவரம் என்ன?

ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் சந்திரயான் -3 தொடர்பான பொருள் ஒன்று தென்பட்டதாக ஊகங்கள் கிளம்பியுள்ள நிலையில், அந்த அடையாளம் தெரியாத பொருள் குறித்து இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 18, 2023, 01:13 PM IST
  • சந்திரயான் -3 கடந்த வெள்ளி அன்று ஏவப்பட்டது.
  • அடுத்த மாதம் நிலவில் சந்திரயான் -3 கால் பதிக்கும்.
  • மர்ம பொருளை ஆஸி., விண்வெளி நிறுவனம் ஆராய்கிறது.
கடற்கரையில் பிரம்மாண்ட மர்ம பொருள்... சந்திரயான்-3 உடையாதா -  முழு விவரம் என்ன? title=

Bizarre News: மேற்கு ஆஸ்திரேலியாவின் கிரீன் ஹெட் கடற்கரையில் ஒரு மர்மமான பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அது இந்தியாவில் இருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 தொடர்பான குப்பைகளாக இருக்கலாம் என்று ஊகங்கள் கிளம்பியுள்ளன. 

சந்திரயான்-3 கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து 642 டன் எடை, 43.5 மீட்டர் உயரம் கொண்ட LVM-3 ராக்கெட் சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து கொண்டு ஏவப்பட்டது. ஆஸ்திரேலிய வானில் கண்டம் கடந்து செல்லும் பாதை காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

ட்விட்டர் ஊகங்கள்

தற்போது ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் கிடைக்கப்பெற்ற இந்த மர்மமான பொருள் LVM-3 இன் பிரித்துவிடப்பட்ட நிலைகளில் ஒன்றாக இருக்கலாம் என்று ட்விட்டரில் ஊகங்கள் கிளம்பியுள்ளன. இருப்பினும் ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அதே நேரத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மையமும் இதுவரை மவுனம் காத்து வருகிறது. இது இந்தியாவில் இருந்து ஒரு பழைய பிஎஸ்எல்வி ராக்கெட்டின் வானில் கழற்றிவிடப்பட்ட பகுதியாகவும் இருக்கலாம்.

மேலும் படிக்க | 16 போர்க்கப்பல்கள், 73 போர் விமானங்கள்... தைவானை முற்றிலுமாக சுற்றி வளைத்த சீனா!

ஆய்வு செய்யும் விண்வெளி நிறுவனம்

தொடர் ட்வீட்களில், ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் கடற்கரையில் காணப்படும் பொருள் குறித்து விசாரித்து வருவதாகக் கூறியது. இதுகுறித்து அந்த நிறுவனம் செய்த ட்வீட்டில், 'மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஜூரியன் விரிகுடாவுக்கு அருகில் உள்ள கடற்கரையில் கிடைத்த இந்த பொருள் குறித்து நாங்கள் தற்போது விசாரித்து வருகிறோம். இது ஒரு வேற்றுகிரகத்திற்கு செல்லும் விண்வெளி ராக்கெட்டுடன் இணைக்கப்பட்டிருக்கலாம். மேலும் தகவல்களை வழங்கக்கூடிய உலகளாவிய அமைப்பகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்" என குறிப்பிட்டுள்ளது. 

பொதுமக்களுக்கும் அறிவுரை

அந்நாட்டின் விண்வெளி நிறுவனம் உள்ளூர் மக்களை அந்தப் பொருளில் இருந்து தூரத்தில் விலகியிருக்கும்படி கூறியுள்ளது. ஏஜென்சியின் கூற்றுப்படி, பொருளின் தோற்றம் தெரியவில்லை என்பதால், மக்கள் அந்த பொருளைக் கையாள அல்லது நகர்த்த முயற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான வேறு ஏதேனும் குப்பைகளை மற்றவர்கள் பார்த்தால், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் கூறியுள்ளது.

இந்த பொருள் 2 மீட்டர் உயரமும், சுமார் 2 மீட்டர் அகலமும் கொண்டது. இதன் காரணமாக இது ராக்கெட்டின் மூன்றாம் கட்டமாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. விண்கலத்தின் பூஸ்டர்கள் மற்றும் நிலைகள் தரையில் இருப்பவர்களின் பாதுகாப்பிற்காக கடலுக்குள் தள்ளப்படுகின்றன. மேலும் குப்பைகளை சீராக தணிக்க ஏவுவதற்கு முன் ஒரு துல்லியமான பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது.

மேலும் படிக்க | பிரம்மாண்டமான ரியல் எஸ்டேட் நிறுவனம் எவர்கிராண்டே நஷ்டம் எவ்வளவு? $96 பில்லியன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News