இன்றைய பாகிஸ்தானில் உள்ள பெரும்பாலான இந்துக்கள் ஓரங்கட்டப்பட்டவர்கள் என்பதும், அதிக துன்புறுத்தல் அனுபவிப்பவர்கள் என்பதும் உலகம் அறிந்த உண்மை. பாகிஸ்தானில் சுமார் 4 மில்லியன் இந்துக்கள் வாழ்கின்றனர், இது மொத்த மக்கள் தொகையில் 1.9 சதவீதமாகும். இவர்களில் 14 லட்சம் இந்துக்கள் சிந்துவில் வாழ்கின்றனர். பாகிஸ்தானில் இந்துக்கள் வழிபட தடை இல்லை, ஆனால் இந்துக்கள் முறையாக வழிபட முடியவில்லை என்று வெளிப்படையாகவே புகார் கூறுகிறார்கள்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல தசாப்தங்களாக நீடித்து வரும் பிரச்சனை, அங்கு வசிக்கும் இந்து சிறுபான்மை சமூகத்திற்கு சவாலாக உள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள சிந்து நதிக்கரையில் உள்ள சகர் தீவுக்குச் செல்ல படகுகளுக்காக இந்து சமுதாய மக்கள் காத்திருக்கின்றனர், அங்கு சுமார் 200 ஆண்டுகள் பழமையான சாது பேலா கோயில் உள்ளது. சாது பேலா கோவில் வளாகத்தை பார்த்தவுடன், மக்கள் கைதட்டி, 'சாது பேலா அமர் ரஹே!' என்று உற்சாகத்தில் கோஷமிடுகின்றனர்.
மேலும் படிக்க | Black Hole: சூரியனை விட 10 மடங்கு பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு!
முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள பாகிஸ்தானில் தீபாவளி உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் இங்கு வருகிறார்கள். இந்த தீவு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு சிந்துவின் பணக்கார முஸ்லீம் நிலப்பிரபுக்களால் இந்து சமூகத்திற்கு பரிசாக வழங்கப்பட்டது, இது பொன்ற நன்கொடைகளை இன்றைய பாகிஸ்தானில் கற்பனை செய்ய முடியாதது.
பாகிஸ்தானில் இந்து கோவில்கள் உள்ளன, இருப்பினும் அவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இது தவிர, இந்துக்களுக்கு சொந்த தொழில், கல்வி மற்றும் சுகாதார நிறுவனங்கள் உள்ளன, அவை 1947 இல், பாகிஸ்தான் நாடு உருவாவதற்கு முன்பு நிறுவப்பட்டன. அவை பாகிஸ்தானின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். சாது பேலா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
2023ம் ஆண்டு இந்த கோவில் கட்டப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஜோத்பூரில் இருந்து சென்ற கட்டிட தொழிலாளர்களும் கலைஞர்களும் இந்த ஆலயத்தைக் கட்டினார்கள். தாஜ்மஹாலின் கட்டிடக்கலை பாணியை பிரதிபலிக்கும் இந்தக் கோவில் இந்தியாவில் இருக்கும் ஒரு கோவிலைப் போலவே இருக்கிறது.
மேலும் படிக்க | அதிக வட்டி தரும் வங்கிகள்! FD களுக்கு 7%க்கும் மேல் வட்டி தரும் இந்திய வங்கிகள்
'பாகிஸ்தான் உருவான பிறகு, இந்து மக்களில் பெரும் பகுதியினர் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தனர், ஆனால் இங்கு வாழும் மக்கள் மகிழ்ச்சியாகவும் வளமாகவும் உள்ளனர். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எங்களை முழுமையாக ஆதரிக்கும் பாகிஸ்தானின் முஸ்லீம் சமூகத்திற்கு நான் நன்றி கூறுகிறேன். நாங்கள் சட்டத்தை பின்பற்றுகிறோம், அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுள்ளோம்’ என்று உள்ளூர் அரசியல்வாதியும், பாகிஸ்தான் இந்து கோயில் நிர்வாகக் குழுவின் பொதுச் செயலாளருமான திவான் சந்த் சாவ்லா கூறுகிறார்.
இருப்பினும், பெரும்பாலான மக்கள் அவரது கூற்றை உண்மையாக கருதுவதில்லை. இந்துக்களின் மதச் சுதந்திரம் மற்றும் நம்பிக்கையைப் பாதுகாக்க பாகிஸ்தான் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று உரிமைக் குழுக்கள் நீண்ட காலமாக குற்றம்சாட்டி வருகின்றன. இந்துக்களின் கோவில்களை இழிவுபடுத்துதல், இந்து வர்த்தக நிறுவனங்கள், வீடுகள் மற்றும் தனிநபர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் கடத்தல்கள், கட்டாய மதமாற்றம் போன்றவற்றை மக்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.
“நாட்டின் பெரும்பாலான இந்து மக்கள் சிந்து மாகாணத்தில் திருப்திகரமாகவும், அமைதியாகவும், எந்த அச்சமும், ஆபத்தும் இல்லாமல் வாழ்கின்றனர். இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் போன்ற சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு மாகாண அதிகாரிகள் முன்னுரிமை அளித்து வருகின்றனர்’ என்று சிந்து மாகாண முதலமைச்சரின் மூத்த ஆலோசகர் வக்கார் மஹ்தி கூறுகிறார்.
மேலும் படிக்க | செயற்கைக்கோளை அழித்த ரஷ்யா; விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; கலக்கத்தில் NASA
பாகிஸ்தானில் சிறுபான்மையாக இருக்கும் இந்துக்களின் நிலை குறித்து, நிபுணர்கள் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர். சிந்து பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் விரிவுரையாளர் ஜாஹிதா ரஹ்மான் ஜாட் கூறுகையில், நாட்டில் அதிகரித்து வரும் தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாதத்தால், இந்துக்களுக்கு எதிரான பாகுபாடு அதிகரித்துள்ளது. இந்த சகிப்பின்மை காரணமாக, பாகிஸ்தான் இந்து பாரம்பரியத்துடனான தொடர்பை பலவீனப்படுத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது, என்றார்.
“பாகிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மையாக இருந்தாலும், அவர்களின் கலாச்சாரத்தை நினைத்து மகிழ்ச்சியடையவோ, அதை வெளிக்காட்டிக் கொள்ளவோ முடியாது. பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் இந்து பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியோ அல்லது பாகிஸ்தானிய சமூகத்தின் முன்னேற்றத்திற்காக இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் செய்த பங்களிப்பைப் பற்றியோ தெரியாது” என்பது கவலைக்குறியது என்று ஜாஹிதா ரஹ்மான் ஜாட் கவலையை பகிர்ந்து கொள்கிறார்.
மேலும் படிக்க | விண்வெளியில் துணி குப்பை அதிகமாகி விட்டது, சோப்பு அனுப்ப NASA திட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ