"AI காட்பாதர்" என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டன், கூகுளில் இருந்து விலகுவதை உறுதிப்படுத்தினார் செயற்கை நுண்ணறிவின் ஆபத்துகள் பற்றி பேசிய அவர், தான் கூகுள் நிறுவனத்தில் இனி பணிபுரியப் போவதில்லை என்று தெரிவித்தார். சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள கூகுள் தலைமையகத்தில் ஹிண்டன் பகுதிநேர வேலை செய்துவந்தார்.
நியூயார்க் டைம்ஸுக்கு நேற்று (2023, மே 1) பேட்டியளித்த ஜெஃப்ரி ஹிண்டன், டொராண்டோ பல்கலைக்கழகத்தில் தனது இரண்டு பட்டதாரி மாணவர்களுடன் இணைந்து AI அமைப்புகளுக்கான அறிவுசார் அடித்தளமாக தொழில்நுட்பத்தை உருவாக்கியவர். ஹிண்டன், இப்போது அதிகாரப்பூர்வமாக AI இன் அபாயங்கள் குறித்து எச்சரிக்கும் விமர்சகர்களின் எண்ணிக்கையில் அவரும் அதிகாரப்பூர்வமாக இணைந்துவிட்டார்.
தனது வாழ்க்கையில் தான் மேற்கொண்ட பணிக்காக வருந்துவதாக கவலை தெரிவித்த ஜெஃப்ரி ஹிண்டன்,"ஆனால் நான் அந்த வேலையை செய்யவில்லை என்றால் வேறு யாராவது செய்திருப்பார்கள் என்ற காரணம் தான் எனக்கு ஆறுதல் அளிக்கிறது” என்று ஹிண்டன் கூறினார்.
மேலும் படிக்க | AI சாட்ஜிபிடி தொடர்பான சர்வதேச விதிகளை உருவாக்க முயற்சிக்கும் ஜப்பான் உச்சிமாநாடு
AI இன் சாத்தியமான அச்சுறுத்தலைப் பற்றி பேசுவது குறித்து தான் முடிவெடுத்த நேரம் மற்றும் காரணங்களையும் விவரித்த அவர், செயற்கை நுண்ணறிவு என்பது, தான் எதிர்பார்த்ததை விட விரைவில் வருவதாகவும் கூறினார். "இது 30 முதல் 50 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக காலம் எடுக்கும் என்று நான் நினைத்தேன், ஆனால், உண்மையில் அது அவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளாது என்பதை உணர்ந்துவிட்டேன்" என்று கூறினார்.
In the NYT today, Cade Metz implies that I left Google so that I could criticize Google. Actually, I left so that I could talk about the dangers of AI without considering how this impacts Google. Google has acted very responsibly.
— Geoffrey Hinton (@geoffreyhinton) May 1, 2023
நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு பேட்டியளித்த பிறகு, அவர் ட்விட்டரில் கூகுளை விட்டு வெளியேறினார், அப்போது தான் AI இன் அபாயங்களைப் பற்றி சுதந்திரமாகப் பேச முடியும் என்று தெளிவுபடுத்தினார், ஏனெனில் கூகுள் தொழில்நுட்ப நிறுவனத்தை விமர்சிக்கும்போது அதில் இருப்பது சரியாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவின் ஆபத்துகளைப் பற்றி பேசலாம் என்று நான் வெளியேறினேன். கூகுள் மிகவும் பொறுப்புடன் செயல்பட்டுள்ளது என்றும் ஹிண்டன் தெரிவித்துள்ளார். ஹிண்டன் AI குறித்து தனது கவலையை வெளிப்படுத்துவது இது முதல் முறை அல்ல. CBS உடனான முந்தைய நேர்காணலில், மார்ச் மாதம், "AI மனிதகுலத்தை அழிக்கும் வாய்ப்புகள்" பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டது,
இந்த மிகவும் முக்கியமான கேள்விக்கு பதிலளித்த "AI காட்பாதர்" ஜெஃப்ரி ஹிண்டன் "நினைத்துப் பார்க்க முடியாத அளவு ஆபத்துள்ளது.... அவ்வளவுதான் நான் சொல்வேன்” என்று CNBC மேற்கோள் காட்டி தெரிவித்திருந்தது.
மார்ச் மாதத்தில், OpenAI சாட்ஜிபிடி (ChatGPT)இன் புதிய பதிப்பை வெளியிட்ட பிறகு, 1,000 க்கும் மேற்பட்ட தொழில்நுட்பத் தலைவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒரு திறந்த கடிதத்தில் கையொப்பமிட்டனர்.
சில மாதங்களுக்குப் பிறகு கூகுள் தனது சொந்த சாட்போட் பார்ட்டை உருவாக்கியதை அடுத்து இந்தத் துறையில் பல மாற்றாங்கள் உருவாகி வருகிறது. கூகுளின் தலைமை விஞ்ஞானி ஜெஃப் டீன் CNN க்கு வழங்கிய அறிக்கையில், “AIக்கான பொறுப்பான அணுகுமுறைக்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம். புதுமைகளை உருவாக்கும்போது, வளர்ந்து வரும் அபாயங்களைப் புரிந்துகொள்ள நாங்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்திருந்தார்”.
செயற்கை நுண்ணறிவு குறித்து அதை உருவாக்கிய விஞ்ஞானிகள் மட்டுமல்ல, ஸ்பெக்ட்ரம் நிபுணர்கள், சட்டமியற்றுபவர்கள், வக்கீல்கள் குழுக்கள் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்ந்தவர்கள் உட்பட பலரும், செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் சாட்போட்கள் தவறான தகவல்களைப் பரப்பி வேலைகளை இடமாற்றம் செய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
NYT உடனான தனது நேர்காணலின் போது இதேபோன்ற கவலைகளை ஹிண்டன் எதிரொலித்தார், அவர் AI வேலைகளை அகற்றும் திறனைக் கொண்டுள்ளது. ஒரு சராசரி மனிதனால் "இனி உண்மை என்ன என்பதை அறிய முடியாது" என்ற அளவிற்கு, தவறான புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கருத்துக்கள் இணையம் முழுவதும் உலா வருவதைப் பற்றிய கவலைகளையும் அவர் வெளிப்படுத்தினார்.
மேலும் படிக்க | விளையாட்டு வினையானது... மாத்திரைகளால் பறி போன 13 வயது சிறுவனின் உயிர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ