ஜப்பானில் மோதிக்கொண்ட 2 விமானம்! தீப்பிடித்து எறிந்த பாகம்.. 379 பயணிகளின் நிலை என்ன?

Flight Catches Fire: ஜப்பானில் தரையிறங்கும் போது விமானம் தீப்பிடித்தது. மற்றொரு விமானம் மோதியதால் விபத்து, 379 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 2, 2024, 05:02 PM IST
ஜப்பானில் மோதிக்கொண்ட 2 விமானம்! தீப்பிடித்து எறிந்த பாகம்.. 379 பயணிகளின் நிலை என்ன? title=

Japan Airlines Accident News In Tamil: ஜப்பானில் உள்ள டோக்கியோ ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் இன்று (ஜனவரி 2, செவ்வாய்க்கிழமை) இரண்டு விமானங்கள் மோதியதில் ஒரு விமானத்தில் தீ பிடித்தது. விமானத்தில் 379 பயணிகள் இருந்தனர். பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். ஜப்பானிய செய்தி நிறுவனமான NHK படி, விமான நிலையத்தில் தரையிறங்கும் போது இரண்டு விமானங்கள் மோதிய விபத்தில், ஒரு விமானம் ஓடுபாதையிலேயே தீப்பிடித்து எரிந்தது. 

இந்த சம்பவத்திற்குப் பிறகு அனைத்து ஓடுபாதைகளையும் ஹனேடா மூடிவிட்டதாக விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இரண்டு விமானங்களில், ஒரு விமானம் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் என்றும், மற்றொரு விமானம் கடலோர காவல்படைக்கு சொந்தமானது என்றும் கூறப்படுகிறது.

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம்

ஜப்பானிய ஊடகங்களின்படி, தீப்பிடித்த விமானத்தின் எண் JAL 516 என்றும், இந்த விமானம் ஹொக்கைடோவில் இருந்து புறப்பட்டது. நியூ சிட்டோஸ் விமான நிலையத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி 16:00 மணிக்கு புறப்பட்ட விமானம், 17:40 மணிக்கு ஹனேடாவில் தரையிறங்க திட்டமிடப்பட்டது. NHK ஊடகம் வெளியிட்டுள்ள வீடியோவில், தீ பிடித்து எரியும் காட்சி. மேலும் பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க - Tsunmai 2024: ஜப்பானில் ஒரே நாளில் 155 நிலநடுக்கங்கள், பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு

கடலோர காவல்படை விமானம்

ஜப்பான் டைம்ஸ் செய்தியின்படி, ஹனேடா விமான நிலையத்தில் தனது விமானம் ஒன்று ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்துடன் மோதியதாக கடலோர காவல்படை கூறியுள்ளது. கடலோர காவல்படை விமானத்தில் மொத்தம் 6 பேர் இருந்தனர். இந்த சம்பவத்தின் பின்னர் ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர். ஆனால் அதன்பிறகு அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர்.

பத்திரமாக மீட்கப்பட்டனர்

ஜப்பான் டைம்ஸின் கூற்றுப்படி, மொத்தம் 367 பேர் விமானத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் மற்றும் நிலைமை கட்டுக்குள் உள்ளது. அதே நேரத்தில், ஜேஏஎல் 516 விமானம் மோதிய விமானத்தின் ஐந்து பணியாளர்கள் காணவில்லை, விமானி பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக ஜப்பான் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

1985ல் நடந்த மிக மோசமான விபத்து

ஜப்பானில் பல தசாப்தங்களாக கடுமையான விமான விபத்து எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டில் மிக மோசமான விமான விபத்து 1985 இல் நிகழ்ந்தது, டோக்கியோவிலிருந்து ஒசாகாவிற்குப் பறந்த JAL ஜம்போ ஜெட் மத்திய குன்மா பகுதியில் விபத்துக்குள்ளானது. அதில் 520 பயணிகள் மற்றும் பணியாளர்கள் பலியாகினர்.

மேலும் படிக்க - சுனாமி வெள்ளம் பேரழிவு என உலகை உலுக்கிய மறக்கமுடியாத இயற்கைப் பேரழிவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News