மின்சாரக் கார் தயாரிப்பு, விண்வெளி ஆராய்ச்சி என பல துறைகளில் தடம் பதித்து உலகின் மிகப்பெரிய பணக்காரராக உள்ள எலான் மஸ்க், முன்னணி சமூக ஊடகமான ட்விட்டரை முழுமையாக வாங்கியுள்ளார். ஒரு பங்குக்கு 54 அமெரிக்க டாலர் என ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையில் 4,400 கோடி அமெரிக்க டாலர்களுக்கு எலான் மஸ்க் வாங்கியுள்ளார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு, ரூ.3.37 லட்சம் கோடி ஆகும்.
எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து நிர்வாகச் செலவைக் குறைப்பதற்காக ட்விட்டரில் புதிதாக ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில ஊழியர்கள் சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், சிலர் தானாக முன்வந்து நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர். துணைத்தலைவர்கள் உள்ளிட்ட ட்விட்டரின் மூத்த நிர்வாகிகளும் நிறுவனத்தில் இருந்து விலகியுள்ளனர்.
எலான் மஸ்க் நிர்வாகப் பொறுப்பை ஏற்றபிறகு நிர்வாகம் எவ்விதம் இருக்கும் என்ற உறுதியான தகவல் இல்லாமல், அந்நிறுவன ஊழியர்கள் தங்களது எதிர்காலம் குறித்து குழப்பமான மனநிலையிலேயே உள்ளனர். ட்விட்டர் ஊழியர்கள் நிலை இப்படி இருக்க யாரும் எதிர்பார்க்காத வகையில் டெஸ்லாவில் 10% ஊழியர்களை பணியில் இருந்து நீக்கவுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க | விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டாரா எலான் மஸ்க்? அதிர்ச்சி ரிப்போர்ட்
பொருளாதாரம் மிக மோசமான நிலையை எட்டலாம் என தனக்கு உள்ளுணர்வு உள்ளதாகவும், எனவே இதனைச் சமாளிக்க டெஸ்லா நிறுவனத்தில் 10% ஊழியர்களை பணியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் எலான் மஸ்க் நிர்வாகிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். மேலும் உலக அளவில் புதிதாக ஊழியர்களை பணியமர்த்துவதை நிறுத்த வேண்டும் எனவும், எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, வீட்டில் இருந்து பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும், வாரத்திற்கு குறைந்த பட்சம் 40 மணி நேரம் வேலைபார்க்க வேண்டும் எனவும், தவறியவர்கள் வேலையை விட்டுச் செல்லலாம் என எலான் மஸ்க் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதை நிறுத்திய எலன் மஸ்க்?
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR