டெல்லியில் நிலநடுக்கம்! நிலநடுக்கத்தின் மையம் லாகூர்! பாதிப்பு விவரங்கள் என்ன?

Earthquake In Delhi & NCR: இரவு சுமார் 10.20 மணியளவில் புது தில்லியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நடுக்கம் ஒரு நிமிடத்திற்கு மேல் நீடித்தது....

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 21, 2023, 11:13 PM IST
  • நிலநடுக்கத்தால் அதிர்ந்த டெல்லி என்சிஆர் பகுதிகள்
  • நொய்டா, காசியாபாத், குர்கானில் நிலநடுக்கம் உணரப்பட்டது
  • இரவு சுமார் 10.20 மணியளவில் புது தில்லியில் கடுமையான நிலநடுக்கம்
டெல்லியில் நிலநடுக்கம்! நிலநடுக்கத்தின் மையம் லாகூர்! பாதிப்பு விவரங்கள் என்ன? title=

நியூடெல்லி: இன்று (2023 மார்ச் 21 செவ்வாய்க்கிழமை) இரவு சுமார் 10.20 மணியளவில் புது தில்லியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ஒரு நிமிடத்திற்கு மேல் நீடித்தது. இந்த நிலநடுக்கத்தின் மையம் பாகிஸ்தானின் லாகூரில் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதாரம் தொடர்பான வேறு எந்த தகவல்களும் இதுவரை வரவில்லை.

6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானை உலுக்கியதாகவும், பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் அதிர்வு உணரப்பட்டதாகவும் ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | ராகுல் காந்தி "தற்கால இந்திய அரசியலின் மிர் ஜாஃப்ர்" பாஜக புதிய சர்ச்சை

இஸ்லாமாபாத் உட்பட பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் ஆகிய மாநிலங்களின் பல்வேறு நகரங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. EMSC பகிர்ந்த முதற்கட்ட தகவல்களின்படி, ஆப்கானிஸ்தானில் உள்ள ஃபைசபாத்தில் இருந்து 77 கிமீ தென்கிழக்கே 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

பெஷாவர், கோஹாட் மற்றும் ஸ்வாபி ஆகிய இடங்களிலும் வலுவான நடுக்கம் ஏற்பட்டது. இது தவிர, லாகூர், குவெட்டா, ராவல்பிண்டி ஆகிய இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. 

பயந்தும் கவலையுடனும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி கலிமா தய்யபாவை ஓதினர். இந்தியாவிலும், வடக்கு பெல்ட் முழுவதும் உள்ள மக்கள், பல மாநிலங்களை கடந்து, வலுவான நடுக்கத்தை உணர்ந்தனர்

மேலும் படிக்க | அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது செய்யப்படலாம்! அரசியல் பரபரப்பு உச்சகட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News