புது டில்லி: ஒரு வார தொழிற்முறை பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்-பின் மகன் ஜூனியர் டொனால்டு ட்ரம்ப் இந்தியா வந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் என்பவரின் முதல் மனைவி இவனாவுக்கு மகனாக பிறந்தவர் ஜூனியர் டொனால்டு ட்ரம்ப் ஆவார். ட்ரம்ப் நிறுவனத்தின் துணைத் தலைவராக பதவி வகித்து வரும் இவர், தற்போது இந்தியா வந்துள்ளார்.
உலகம் முழுவதும் தொழில் நடத்தி வரும் ட்ரம்ப் நிறுவனம் இந்தியாவிலும் தொழில் தொடங்க உள்ளது. அதன்படி, டெல்லி, மும்பை, புனே, குர்கான் மற்றும் கொல்கத்தா ஆகிய பகுதிகளில் 'ட்ரம்ப் டவர்ஸ்' என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்புகளை நிறுவ திட்டமிட்டுள்ள அந்த நிறுவனம், முதல்கட்டமாக குர்கானில் நவீன வசதிகளுடன் கூடிய 258 குடியிருப்புகள் கொண்ட அப்பார்ட்மென்டை கட்டி வருகிறது.
5 -10 கோடி ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள குடியிருப்புகளின் பணிகள் 2023-ம் ஆண்டு முடிவடையவுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜூனியர் டொனால்டு ட்ரம்ப் இந்தியா வந்துள்ளார். அவரது வருகையால் குர்கான் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு வாரம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்த வார இறுதியில் டெல்லியில் நடைபெறவுள்ள வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இவர், தனது தந்தைக்காக அதிபர் தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டு தந்தையை போல் தொழிலதிபராகவும் உள்ளார் என்பது குறிபிடத்தக்கது.