ஈரான் நாடு போரிட விரும்பினால் அதுவே அந்த நாட்டின் முடிவாக இருக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்!!
அமெரிக்காவுக்கு எதிராக போரை தொடங்கும் முடிவை ஈரான் எடுத்தால், அதுவே அந்நாட்டின் இறுதி அத்தியாயமாக அமையும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்கா எந்த ஒரு அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது என்றும், மீண்டும் ஒருமுறை அமெரிக்காவை அச்சுறுத்த நினைக்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதைத் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு ஈரான் ஆதரவளிப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளுக்கு ஈரானால் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று வாதிடும் அமெரிக்கா, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வளைகுடா கடற்பகுதியில், விமானம் தாங்கி போர்க் கப்பல், குண்டு வீசும் விமானங்களை அனுப்பி உள்ளது. இதனால் பாரசீக வளைகுடா பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதனிடையே, போர் மீது ஈரானுக்கு நம்பிக்கை இல்லை என்றும், வளைகுடா பகுதியில் தங்களால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் மொஹம்மது ஜாவேத் கூறியிருப்பதாக, அந்நாட்டு செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளது.
If Iran wants to fight, that will be the official end of Iran. Never threaten the United States again!
— Donald J. Trump (@realDonaldTrump) May 19, 2019
ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதைத் தொடர்ந்து தீவிவாதிகளுக்கு ஈரான் ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டி வந்த அமெரிக்கா, தற்போது அந்நாட்டினை அச்சுறுத்த விமானம் தாங்கிக் கப்பல், குண்டு வீசும் விமானங்களையும் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.