Pakistan Election News: பாகிஸ்தான் நாட்டில் சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. நவாஸ் ஷெரீஃப், சிறையில் இருக்கும் இம்ரான் கான் உள்ளிட்டோரின் கட்சிகள் இந்த தேர்தலில் முன்னணி வகித்தன. அந்த வகையில், தற்போது பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சராக பெண் ஒருவர் முதல்முதலாக தேர்வாகி உள்ளார். அவர் யார், அவரின் பின்னணி ஆகியவற்றை இங்கு காணலாம்.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் முதலமைச்சராக மர்யம் நவாஸ் இன்று வெற்றி பெற்றுள்ளார். இவர் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் (PML-N) கட்சியின் மூத்த துணை தலைவரும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப்பின் மகள்தான் மர்யம் நவாஸ் ஆவார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதலமைச்சராக தேர்வாகி உள்ளார்.
இந்த தேர்தலில் மொத்தம் 220 வாக்குகளை பெற்று முதலமைச்சர் பொறுப்பை பெற்றதாக சபாநாயகர் மாலிக் அகமத் கான் அறிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. அவரை எதிர்த்து போட்டியிட்ட சுன்னி இத்தேஹாத் கவுன்சில் சார்பில் போட்டியிட்ட ராணா அஃப்டாப் கான் ஒரு வாக்கு கூட பெறவில்லை. அவரது கட்சி கடைசி நேரத்தில் தேர்தலை புறக்கணித்ததாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | நியூயார்க் நகரம் கடலில் மூழ்கும் என எச்சரிக்கும் நாசா! அதிர்ச்சிகரமான ஆய்வு
யார் இந்த மர்யம் நவாஸ்?
நவாஸ் ஷெரீப்பின் மகளான மர்யம் நவாஸ் ஷெரீப் 1973ஆம் ஆண்டில் பாகிஸ்தான் லாகூரில் பிறந்தார். இவர் கடந்த 2013ஆம் ஆண்டில் அரசியலில் காலடி எடுத்து வைத்தார். மேலும், இவர் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்று, 2013ஆம் ஆண்டில் அக்கட்சி தேசிய அளவில் ஆட்சியை பிடிக்க பெரும் பங்கை வகித்தார்.
அதே ஆண்டில் பிரதமரின் இளைஞர் திட்டத்தின் தலைவராகவும் இவர் பொறுப்பேற்று பணியாற்றினார். இருப்பினும், இவரது நியமனத்தை எதிர்த்து லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், தொடர்ந்து 2014ஆம் ஆண்டில் அவர் அந்த பதவியை ராஜினாமா செய்தார்.
வலிமைமிக்க பெண்மணி
குறிப்பாக, 2017ஆம் ஆண்டில் பிபிசியின் உலகம் முழுவதும் உள்ள மிகவும் செல்வாக்கு மிக்க 100 மகளிரின் பட்டியலிலும் மர்யம் ஷெரீப் இடம்பெற்றிருந்தார். 2017ஆம் ஆண்டில் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலகின் மிகவும் வலிமையான 11 பெண்களின் பட்டியலிலும் மர்யம் ஷெரீப் இடம்பெற்றிருந்தார். இதன்மூலம், மர்யம் ஷெரீப் பாகிஸ்தானில் பெற்றிருந்த அதிகாரத்தை நம்மால் புரிந்துகொள்ள இயலும்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதலமைச்சராக முதல்முறையாக மர்யம் ஷெரீப் தேர்வான பின்னர், பொதுமக்களிடையே பேசினார். அப்போது பேசிய அவர், "பொறுப்பேற்ற பின்னர் என்னை முதலமைச்சராக தேர்வு செய்ய வாக்களித்தவர்களுக்கு மட்டுமின்றி, எனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்த பணியாற்றுவேன். மேலும், எதிர்க்கட்சிகளுக்கு நான் ஒரு தகவலை கூற விரும்புகிறேன், எனது கட்சிக்காரர்களை போன்றே நான் பணியாற்றும் இடத்தின் கதவும், எனது இதயமும் எப்போதும் திறந்திருக்கும்" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ