டெல்லி-தோஹா விமானம் QR579 கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது

கத்தார் ஏர்வேஸ் விமானம் QR579 டெல்லியில் இருந்து தோஹாவிற்கு சென்று கொண்டிருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 21, 2022, 11:32 AM IST
டெல்லி-தோஹா விமானம் QR579 கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது title=

டெல்லியில் இருந்து தோஹா சென்ற கத்தார் ஏர்வேஸ் விமானம் QR579 பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தின் சரக்குகள் வைக்கப்படும் பகுதியில் இருந்து புகை வந்ததை அடுத்து விமானம் பாகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டது. அந்த வழித்தடத்தில் கத்தார் ஏர்வேஸ் ஏர்பஸ் ஏ350 விமானத்தை இயக்கியது.

விமானம் QR579 தில்லியில் இருந்து  திட்டமிடப்பட்ட படி, அதிகாலை 3.50 மணிக்குப்  புறப்பட்ட நிலையில், சுமார் 1.15 மணி நேரத்திற்குப் பிறகு 5.45 AM மணிக்கு பாகிஸ்தான் கராச்சியில் தரையிறங்கியது என விமான கண்காணிப்பு இணையதளமான Flighaware வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன. விமானம் தோஹா சர்வதேச விமான நிலையத்தில் காலை 7.15 மணிக்கு தரையிறங்குவதாக இருந்தது.

"கத்தார் ஏர்வேஸ் விமானம் QR579 டெல்லியில் இருந்து தோஹாவிற்கு மார்ச் 21 அன்று கராச்சிக்கு திருப்பிவிடப்பட்டது. சரக்குகள் வைக்கும் பகுதியில் புகை கண்டறியப்பட்டதன் காரணமாக அவசரநிலையை அறிவித்து கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது. விமானம் கராச்சியில் பாதுகாப்பாக தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டன. ," என்று கத்தார் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | எனது 'நண்பர்' மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறேன்: இஸ்ரேல் பிரதமர்

"சம்பவம் குறித்த விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. தோஹாவிற்கு பயணிகளை ஏற்றிச் செல்ல, மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகளுக்கு  சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்," என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | பாகிஸ்தான் சியால்கோட் ராணுவ தளத்தில் மிகப்பெரிய வெடிகுண்டு வெடிப்பு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News