Climate Change: சஹாரா பாலைவனத்தை அச்சுறுத்தும் பனிப் போர்வை

உலகின் வெப்பமான பாலைவனம் சஹாரா. சுடும் மணற்பரப்பு தற்போது வெண்பனிப் போர்வையை போர்த்திக் கொண்டிருக்கிறது. காண்பதற்கு கண்களை கவரும் இந்த காட்சிகள் உண்மையில் உயிரினங்களுக்கு சரியானதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 19, 2021, 03:35 PM IST
  • உலகின் வெப்பமான பாலைவனம் சஹாரா.
  • சஹாராவில் தற்போது பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது
  • இன்னும் 15000 ஆண்டுகளில் சஹாரா, பசுமையாகிவிடும்
Climate Change: சஹாரா பாலைவனத்தை அச்சுறுத்தும் பனிப் போர்வை title=

உலகின் வெப்பமான பாலைவனம் சஹாரா. சுடும் மணற்பரப்பு தற்போது வெண்பனிப் போர்வையை போர்த்திக் கொண்டிருக்கிறது. காண்பதற்கு கண்களை கவரும் இந்த காட்சிகள் உண்மையில் உயிரினங்களுக்கு சரியானதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. புகைப்படக் கலைஞர்கள் அரிய காட்சியைப் படம் பிடிக்கவும், பாலைவனத்தின் (Desert) மாறும் பேரழகை காட்சிப்படுத்தவும் இங்கு வருகின்றனர்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்லலாம். ஆனால், ஒரு பாலைவனம்,  சரியா? என்பது சுற்றுச்சூழலியர்களின் மாபெரும் கவலையாக இருக்கிறது. சஹாரா பாலைவனம் (Desert) கடந்த சில லட்சம் ஆண்டுகளில் காலநிலை மாற்றங்களுக்கு உட்பட்டிருப்பதாக புவியியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

சஹாரா பாலைவனத்தின் (Sahara Desert) வெப்பநிலை பொதுவாக,  25 முதல் 30 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும், ஆனால் மாறிவரும் வானிலை, அதை வெப்பத்தை, தண்மையாக மாற்றி தற்போது வெப்பநிலை மைனஸ் 3 டிகிரியை எட்டியுள்ளது. இது 50 ஆண்டுகளின் சாதனையை முறியடித்தது. 

Also Read | வரலாற்றில் ஜனவரி 19: செவ்வாய் கிரகத்தில் கால்சியம் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டது 

வழக்கமாக ஜனவரி மாதத்தில் உலகின் பெரும்பாலான பகுதிகளில் பனி பெய்யும், ஆனால் ஆப்பிரிக்கா (Africa) மற்றும் மத்திய கிழக்கு பாலைவனங்களில் பனிப்பொழிவு (Snow) இருக்காது என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

இந்த முறை பனிப்பொழிவு காரணமாக மணலில் வெண்பனிப்போர்வை மூடிவிட்டது.  இன்னும் 15 ஆயிரம் ஆண்டுகளில் சஹாரா பாலைவனம் (Sahara Desert) பசுமையாக மாறிவிடலாம் என்று விஞ்ஞானிகள் (Scientist) கூறுகின்றனர். 

வட ஆப்பிரிக்காவின் பெரும்பகுதி சஹாரா பாலைவனத்தால் சூழப்பட்டுள்ளது. வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக விவாதப் பொருளாக உள்ளது சஹாரா.  

Also Read | Indira Gandhi இந்தியாவின் முதல் பெண் பிரதமரான நாள் இன்று

1979 பிப்ரவரி 18 ஆம் தேதியன்று பனிப் புயல் சஹாராவில் சுமார் அரை மணி நேரம் தாக்கியது.  அதன்பிறகு, 37 ஆண்டுகளுக்குப் பிறகு, 2016 ஆம் ஆண்டில் சஹாராவில் மீண்டும் பனிப்பொழிவு ஏற்பட்டது. அதற்கு பிறகு, 2017ஆம் ஆண்டு ஜனவரியில் பனி புயல் உலகின் வெப்பமான பாலைவனத்தில் மீண்டும் பொழிந்தது. அப்போது சுமார் ஒரு மீட்டர் படிமனாக பனி படிந்தது. இந்த ஆண்டு, 2021இல், சஹாராவின் சில பகுதிகளில் 40 சென்டிமீட்டருக்கும் அதிகமான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.  

ஐரோப்பாவில் நிலவும் உயர் அழுத்தத்தின் விளைவாக குறைந்த அழுத்த அமைப்புகள் வழக்கத்திற்கு மாறாக தெற்கே தள்ளப்படுவதால் வானிலையில் இந்த வினோதமான வானிலை மாற்றங்கள் (Climate Change) ஏற்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

Also Read | Solar Fencing எவ்வாறு செயல்படுகிறது? மானியம் பெற தயாரா?  

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News