சீனாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, குழந்தைகள் சாப்பிடும் உணவில் சோடியம் நைட்ரைட் விஷத்தை கலந்து ஒரு குழந்தையைக் கொன்று, 24 பேரை பாதிப்பிற்குள்ளாக்கிய ஒரு முன்னாள் மழலையர் பள்ளி ஆசிரியருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. மத்தியா சீனா பகுதியில் கடந்த வாரம் அவரை தூக்கிலிட்டதாக அரசின் ஊடகங்கள் நேற்று தெரிவித்தன.
39 வயதான வாங் யுன் என்ற அந்த ஆசிரியர், அவருக்கு எதிரான தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார். ஆரம்பத்தில் செப்டம்பர் 2020இல் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜியாவோசு நகர இடைநிலை மக்கள் நீதிமன்றத்தால் இத்தண்டனை வழங்கப்பட்டது.
இருப்பினும் கடந்த வியாழக்கிழமை அதே நீதிமன்றம் அந்த ஆசிரியரின் அடையாளத்தை சரிபார்த்து, அவரை தூக்கிலிடும் இடத்திற்கு அழைத்துச் சென்று மரண தண்டனையை நிறைவேற்றியது என்று நீதிமன்ற அறிக்கை கூறியதாக மாநில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | Miracle! விபத்தில் தனியாய் கழன்ற தலையை உடலுடன் பொருத்திய மருத்துவ அதிசயம்
மார்ச் 2019இல், சக ஆசிரியருடன் தகராறில் ஈடுபட்ட பிறகு வாங் யுன் சோடியம் நைட்ரைட்டை வாங்கியுள்ளார். மறுநாள் காலை மழலையர் பள்ளியில், குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிரத்யேக கஞ்சியில் அந்த ரசாயன கலவைகளை அவர் சேர்த்தார் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததாக அரசின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
"Eight treasures porridge" என்றழைக்கப்படும் அந்த உணவு சீனாவில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு சுவை கொண்ட அரிசி சார்ந்த கஞ்சி ஆகும். ஜனவரி 2020இல், குழந்தைகளில் ஒன்று அது சாப்பிட்ட விஷம் காரணமாக பல உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்தது. மேலும் 24 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமீபத்திய ஆண்டுகளில் சீன மழலையர் பள்ளிகளில் மரணங்கள் அல்லது வன்முறைகளின் பல உயர்நிலை வழக்குகளில் வாங் யுன்னின் வழக்கும் ஒன்றாகும். கடந்த திங்களன்று சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள மழலையர் பள்ளி மீது 25 வயது இளைஞன் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார். இது பள்ளியில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை பற்றிய கவலையைத் தூண்டியது.
மனித உரிமைகள் தன்னார்வ தொண்டு நிறுவனமான அம்னஸ்டி இன்டர்நேஷனல் மதிப்பீட்டின்படி, சீனா ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதாக கூறுகிறது.
மேலும் படிக்க | பாகிஸ்தானுக்கு அணுமின் நிலையம் கட்ட உதவும் சீனா! நன்றியில் நெகிழும் பாக் பிரதமர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ