இன்று தியான்மென் சதுக்கம் படுகொலை நாள்!! சீனாவில் என்ன நடந்தது? ஒரு அலசல்

சீனாவின் கோர முகத்தை நினைவூட்டும் தியான்மென் சதுக்கம் படுகொலை (1989 Tiananmen Square protests) நினைவு நாள் இன்று. சீனாவில் மனிதநேயம் கொல்லப்பட்ட தினம். தியன்மென் படுகொலை நடந்து 31 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 4, 2020, 10:23 PM IST
இன்று தியான்மென் சதுக்கம் படுகொலை நாள்!! சீனாவில் என்ன நடந்தது? ஒரு அலசல் title=

சீனாவின் கோர முகத்தை நினைவூட்டும் தியான்மென் சதுக்கம் படுகொலை (1989 Tiananmen Square protests) நினைவு நாள் இன்று. சீனாவில் மனிதநேயம் கொல்லப்பட்ட தினம். தியன்மென் படுகொலை நடந்து 31 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

உலகிற்கே ஒரு பெரியா நெருக்கடியாக மாறியுள்ள சீனாவின் கோர முகத்தை.. ஆர்எஸ்எஸ் பத்திரிக்கையான ஆர்கனைஸர் நினைவூட்டியுள்ளது. 31 ஆண்டுக்கு முன் நடந்த படுகொலை பற்றிய மறக்கமுடியாத படத்தை தனது அட்டைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 1989 ஜூன் 4 அன்று, தியான்மென் சதுக்கத்தில், சீன வீரர்கள், நிராயுதபாணியாக இருந்த மாணவர்கள் மற்றும் மக்கள் மீது டாங்குகளை ஏற்றினர். சம்பவத்தின் 31வது ஆண்டு நினைவு நாளில் ஆர்.எஸ்.எஸ் பத்திரிக்கை அட்டைப் பக்கத்தில் வெளியிட்டப்பட்டுள்ள. இந்தப் படத்தில் நான்கு டாங்குகள் காணப்படுகின்றன. இந்த போர் டாங்குகளுக்கு முன்னால் சீனா மாணவர்கள் நெஞ்சை நிமிர்த்தி நிற்கின்றனர்.

1989 ஆம் ஆண்டில் (1989 Tiananmen Square massacre), ஜனநாயகத்திற்கான கோரிக்கையுடன் சீனாவில் ஒரு மகத்தான இயக்கம் நடந்தது. சீன மாணவர்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்றனர். 1989 ஜூன் 4, அன்று, சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள தியான்மென் சதுக்கத்தில், மாணவர்களின் தலைமையில் போராட்டம் வெடித்தது. இந்த மாணவர்கள் சீனாவின் கம்யூனிஸ்ட் அரசை கவிழ்த்து, ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும் என கோரினர். ஆனால் சீன அரசு இந்த போராட்டத்தை டாங்குகள் மற்றும் துப்பாக்கிகளின் உதவியுடன் நசுக்கியது. பெய்ஜிங்கின் வீதிகள் அப்பாவிகளின் இரத்தத்தால் சிவந்திருந்தன.

1989 ஜூன் 4, அன்று அப்போதைய சீன கம்யூனிச அரசின் அடக்குமுறை நடவடிக்கையில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதற்கான சரியான எண்ணிக்கை இது வரை தெரியவில்லை. சீனாவின் சர்வாதிகார அரசு, 200 பேர் கொல்லப்பட்டதாகவும், 7 ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் கூறியது. அந்த நேரத்தில், சீனாவில் இருந்த உலகின் முக்கிய நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் கொடுத்த எண்ணிக்கை வேறு விதமாக இருந்தது. சீனாவில் இருந்த ஒரு இங்கிலாந்து பத்திரிகையாளர் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறினார். ஜனநாயகத்தை நசுக்கும் ஒரு பயங்கரமான காட்சியை உலகம் இதற்கு முன்னர் பார்த்ததில்லை. எந்தவொரு நாட்டின் அரசும் இதுபோன்ற ஒரு அடக்குமுறையை மேற்கொண்டதில்லை.

1989  ஜூன்  4 அன்று பெய்ஜிங்கின் தியான்மென் சதுக்கத்தில் நடந்த படுகொலை இன்றும் உலகம் முழுவதும் விமர்சிக்கப்படுகிறது. சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் சீர்திருத்தவாதியுமான ஹு யோபாங்கின் மரணத்திற்குப் பின்னர், ஏப்ரல் 1989 இல் போராட்டம் தொடங்கியது. ஹு யோபாங் சீனாவில் தனது சொந்த அரசின் அடக்குமுறை, பொருளாதாரம் மற்றும் அரசியல் கொள்கைகளை பகிரங்கமாக எதிர்த்தார். ஆனால் பொலிட்பீரோ அவரது கருத்தை சிறிதும் விரும்பவில்லை.

சீர்திருத்தவாதியான ஹு யோபாங்கின் மறைவில், சதி உள்ளதாக, ஜனநாயக சார்பு மக்கள் சந்தேகித்தனர். ஆகவே, அவரது மரணத்திற்குப் பிறகு, அப்போதைய சீன கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் பொது மக்களின் அதிருப்தி பெரிய போராட்டமாக மாறியது. ஜூன் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில், இந்த இயக்கம் மிகப் பெரிய பொது போராட்டமாக மாறிய போது, கம்யூனிச சக்தி சீனாவிலிருந்து ஒழிந்து விடும் என்று உலகம் நினைத்தது. ஆனால் இரக்கமற்ற கம்யூனிச அரசு, அதன் இராணுவத்த்தை பயன்படுத்தி, அப்பாவி மக்களை கொன்று, அந்த மக்கள் போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு நசுக்கியது.

ஜூன் 3 ஆம் தேதி இரவு, பெய்ஜிங்கின் தெருக்களில் போராட்டக்காரர்கள் எந்த சூழ்நிலையிலும் போராட்டத்தை கைவிட தயாராக இல்லை என்று இராணுவம் அரசிடம் தெளிவாகக் கூறியது. போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அகற்றினால், பல உயிர்கள் போகும் என இராணுவம் கூறியிருந்தது. ஆனால் கம்யூனிஸ்ட் அரசு இந்த இயக்கத்தை நசுக்க படுகொலையை செய்ய அஞ்சவில்லை.இராணுவம், அரசின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர வேறு வழியில்லை. சீன இராணுவம் துப்பாக்கிகளால் சுட்டது. டாங்குகளில் இருந்தும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. நிராயுதபாணிகளின் சடலங்கள் எங்கும் காணப்பட்டன.

இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், படுகொலை நடந்த 31 ஆண்டுகளுக்குப் பிறகும், எந்தவொரு கம்யூனிஸ்ட் தலைவரும் இதற்காக மன்னிப்பு கேட்கவில்லை. எந்த கம்யூனிஸ்ட் தலைவரோ அல்லது அரசோ அதன் விமர்சனத்தை பற்றி கூட கவலைப்படவில்லை. இருப்பினும், சீனாவின் இந்த காட்டுமிராண்டித்தனமான, மனிதாபிமானமற்ற நடவடிக்கை உலகம் முழுவதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. நிராயுதபாணியாக இருந்த அப்பாவி மக்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டது குறித்து ஆட்சி அதிகாரத்தில் உள்ள யாரும் கவலைப்படவில்லை. இந்த படுகொலைகளை நியாயப்படுத்தும் அறிக்கைகள் இடையில் வந்தன. 

சில காலத்திற்கு முன்பு பிராந்திய பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்க சிங்கப்பூர் சென்ற பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வீ ஃபெங், தியான்மென் சதுக்க படுகொலை குறித்து கூறுகையில், “எந்தவொரு நாட்டிலும், அரசியல் ஸ்திரமின்மையை சவால் விடும் வகையில் நெருக்கடி வரும். தியன்மென் சதுக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, அரசியல் நெருக்கடியைச் சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும். அரசின் இந்த சரியான நடவடிக்கை காரணமாக, சீனாவில் ஸ்திரத்தன்மையும் வளர்ச்சியும் ஏற்பட்டது” என்றார்.

தியான்மென் சதுக்கம் போன்ற காட்டு மிராண்டித்தனமான படுகொலை குறித்து சீன பாதுகாப்பு அமைச்சர் 31 ஆண்டுகளுக்குப் பின்னர் கூறிய அறிக்கையிலிருந்து கம்யூனிஸ்ட் ஆட்சியின் மனநிலை எவ்வளவு கொடூரமானது, மனிதாபிமானமற்றது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். 

ஆர்.எஸ்.எஸ் பத்திரிக்கையான ஆர்கனைஸர் அட்டையில் அச்சிடப்பட்ட இந்த படம், இந்த அடக்குமுறை வரலாற்று நிகழ்வை நமக்கு நினைவூட்டியுள்ளது. இது  சீன கம்யூனிஸ்ட் அரசுக்கு நிச்சயம் கோபத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், நம் நாட்டிலும் கூட சீனாவை விமர்ச்சிதால் கோபம் கொள்பவர்கள் உள்ளனர். 

முன்னதாக, இந்தியாவிற்கும் சீன இராணுவத்திற்கும் இடையிலான பிரிகேடியர் அளவிலான பேச்சுவார்த்தையில் எந்த தீர்வும் காணப்படவில்லை. அதன் பிறகு ஜூன் 6 ஆம் தேதி, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் கமாண்டர் நிலையில் பேச்சுவார்த்தை  நடைபெற உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், அதிகரித்து வரும் பதற்றத்தை குறைக்க இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்துள்ளன. லடாக் எல்லை தகராறு தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை வெளி வந்துள்ளது. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினை தீர்க்கபடும் என்றும், சர்ச்சைக்கு தீர்வு காண மூன்றாம் தரப்பு தலையீடு தேவையில்லை என்றும் சீனா கூறியுள்ளது. 

இந்தியா எந்த நிலையிலும் அடி பணியாது என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் சீனாவிற்கு தெளிபடுத்தியுள்ளார்.

இந்தியாவின் உறுதியான அணுகுமுறையால் சீனா தனது வாலை சுருட்டிக் கொள்வது இது முதல் முறை அல்ல. முன்னதாக 2017 ஆம் ஆண்டில், இந்தியா சீனா பூட்டானின் ட்ரை ஜங்க்‌ஷனான டோக்லாம் விஷயத்திலும் இந்தியா இதை செய்துள்ளது. டோக்லாமில் சட்டவிரோத ஊடுருவலை சீனா மேற்கொண்டது . அப்பகுதியில் சீனா உள்கட்டமைப்பை ஏற்படுத்த முயன்றபோது, இந்திய இராணுவம் அவ்வாறு செய்வதைத் தடுத்தது. கிட்டத்தட்ட 73 நாட்கள் பதற்றத்திற்குப் பிறகு, சீன இராணுவம் பின்வாங்கியது. இப்போது மீண்டும், இதேபோன்ற செய்தி கால்வான் பள்ளத்தாக்கிலிருந்து வருகிறது. சீனாவிற்குள் நிலைமை சரியாக இல்லை. அரசு மீது அதிருப்தி நிலவுகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் அதிருப்தி உள்ளது. லட்சக்கணக்கான வேலையற்ற தொழிலாளர்கள் அரசின் மீது கடும் அதிருப்தி கொண்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் தங்களுக்கான உரிமை கிடைக்கவில்லை என்று நினைக்கிறார்கள். இதற்கிடையில், கொரோனா வைரஸ் சீனாவின் பொருளாதார நிலையையும் மோசமாக பாதித்துள்ளது. இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வேலையில்லாமல் உள்ளனர். கொரோனா காரணமாக சீனா ஒரு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.

சீனா ஒரு மோசமான கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. 1989-க்குப் பிறகு மீண்டும் நாட்டிற்குள் ஆழ்ந்த அதிருப்தி உருவாகி வருகிறது. இதில், அங்குள்ள ஊடகங்கள் அனைத்தும் அரசின் அதிகாரப்பூர்வ ஊடகமாக உள்ளன. இதுபோன்ற செய்திகள் வெளிவர அனுமதிக்காது. ஆனால் ஒரு போராட்டம் வெடிக்கும். மறுபுறம், கொரோனா வைரஸ் உலகை பாதித்திருப்பதால், உலகம் முழுவதும் சீனா மீது கோபமாக உள்ளது. கொரோனா வைரஸ் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவை பாதித்து, அமெரிக்கா இப்போது சீனாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டிரம்ப் நிர்வாகம் அமெரிக்காவில், சீன பயணிகள் விமானங்களை தடை செய்ய உள்ளது. இந்த தடை ஜூன் 16 முதல் அமல் படுத்தப்பட உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்,  இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய முன்வந்து பெய்ஜிங்கின் தூக்கத்தை கெடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் சீனாவை மேலும் பதற்றமடைய செய்துள்ளது. இந்த உரையாடலின் போது லடாக் பிரச்சினை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக என்று கூறப்படுகிறது.

சீனா, தனது நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பை சந்தித்து வருவதால், அனைவர் கவனத்தையும் திசை திருப்ப முயல்கிறது. மேலும், சீனா லடாக்கில் இருந்து பின் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தியாவுடனான தற்போதைய பிரச்சனையை தீர்க்க எந்த மூன்றாம் தரப்பினரும் மத்தியஸ்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று சீனா தெளிவுபடுத்தியுள்ளது. சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிசான், இந்தியாவுடனான எல்லையில் சீனாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. இரு நாடுகளும் தங்கள் தலைவர்களுக்கு இடையிலான வேறுபாட்டை தீர்க்க, ஒருமித்த கருத்தை  ஏற்படுத்த நேர்மையாக முயலும் என கூறியுள்ளார். செவ்வாயன்று நரேந்திர மோடிக்கும் டொனால்ட் டிரம்பிற்கும் இடையிலான உரையாடல் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ஜாவோ லிஜன் இந்த அறிக்கையை வழங்கினார்.

உண்மையில், ஜூன் 6 ம் தேதி கால்வன் பள்ளத்தாக்கில் இராணுவ மட்ட பேச்சுவார்த்தைக்கு முன்பு, சீனா பின்வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. டோக்லாமைப் பற்றி நினைவு கூறும் போது, இந்திய இராணுவம் இனி 1962 ஆண்டில் இருந்த நிலையில் இல்லை என்பதை சீனா உணர்ந்திருக்கிறது. அக்சாய் சின் பகுதியைக் கைப்பற்ற நடவடிக்கை எடுக்க இந்தியா தயங்காது என உணர்ந்துள்ளது. ஒரு போர் வந்தால், இரு நாடுகளின் வீரர்களும் எல்லையில் ஒருவருக்கொருவர் எதிர்கொள்ளும் போது ஏற்படும் அழிவை நினைத்து பார்க்க முடியாது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எந்த ஒரு சூழ்நிலையிலும் இந்தியத் தலை வணங்காது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

இருப்பினும், லடாக்கில் சீனா பின் வாங்கி விட்டதால், சீனா உடன் உள்ள பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரப்போவதில்லை. கொரோனா வைரஸ் தொற்றுநோய் எவ்வாறு பரவுகிறது என்பதற்கு இப்போது உலகத்திடம் சீனா பதிலளிக்க வேண்டும். ஏனென்றால் தொற்றுநோயை பரப்புவதில் சீனாவின் பங்கு  முற்றிலும் சந்தேகத்திற்குரியதாக கருதப்படுகிறது.

முதலாவது கேள்வி, வுஹானின் ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் உருவானதா? இரண்டாவதாக செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் வுஹானில் கொரோனா வைரஸ் பரவினாலும் சீனா, உலக சுகாதார அமைப்போடு சேர்ந்து உலகத்திடமிருந்து அதன் தகவல்களை மறைத்து வைத்ததா? அடுத்து, அந்த நேரத்தில் வுஹானில் இருந்து உலகம் முழுவதற்கு தொடர்ந்து விமானங்களை சீனா அனுப்பியதா? கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திய பின்னர், உலகம் ஒன்றுபட்டு கேட்கும் இந்த கோள்விகளுக்கு சீனா பதிலளிக்க வேண்டும். இல்லையென்றால் உலகம் முழுவதும் சீனாவை ஒதுக்கி வைக்கலாம்.

(மொழியாக்கம் : வித்யா கோபாலகிருஷ்ணன்)

Trending News