சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விபத்து நடந்த கடைசி திக்திக் நிமிட வீடியோவும் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து நடந்த இடத்தில் தற்போது 300-க்கும் மேற்பட்ட மீட்புக்குழுவினர் குவிந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. போயிங் 737 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அங்கிருந்த மலைப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Breaking: 133 பயணிகளுடன் சென்ற சீன விமானம் விழுந்து நொறுங்கியது!
சீனாவின் குவாங்ஸி பகுதியில் தரையிரங்க இருந்த விமானம் தவறி தலைக்குப்புற விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.7 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த விமானம் மோதியதில் மலையின் உச்சியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், மீட்புக்குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 132 பேருடன் புறப்பட்ட இந்த விமானத்தில் 9 விமான பணியாளர்களும் இருந்துள்ளனர்.
Major #planecrash in #China, Boeing 737 plane crashed into the mountains, 132 passengers were on board.
we can see the falling plane in CCTV footage. pic.twitter.com/sMmbZjMSO4— Rajan Kumar Jha (@RealRajanjha) March 21, 2022
This gives me chills.. the crash of the Boeing 737-81B from China Southern Airlines live playback. Rest in piece all 132 victims #ChinaPlaneCrash #planecrash pic.twitter.com/HTBtxrXTjm
— Shady (@pIuggo) March 21, 2022
My deepest condolences to the lost lives
Boeing 737 #PlaneCrash #china pic.twitter.com/prnOfJnLda— Ajay Dhapa kuda (@Ajaydhapabjp) March 21, 2022
A Boeing 737 just crashed in southern China. This was one of the last moment recorded on the plane. maybe the only moment. Viewers’ discretion advised. #planecrash #Boeing#China pic.twitter.com/YvTpSNSCV9
— Ajay Dhapa kuda (@Ajaydhapabjp) March 21, 2022
மேலும் படிக்க | சீனாவில் விமான விபத்து: 133 உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி வீடியோ
இந்நிலையில் விமானம் எப்படி கீழே விழுந்தது என்ற சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் மலைப்பகுதியில் விமானம் தலைக்குப்புற விழுவது பதிவாகியுள்ளது. அதேபோல விபத்துக்குள்ளான விமானத்தின் ஓடுதள மேற்பார்வை வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்த விபத்தை நேரில் பார்த்த அப்பகுதியினர், விமானம் படு வேகமாக மலையின் உச்சியில் விழுந்ததாக தெரிவித்துள்ளனர். விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களுக்கு பலரும் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR