புதுடெல்லி: 2007 மற்றும் 2018ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சீனா பல முறை இணைய தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதில் இந்திய செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளும் (Indian satellite communication) பல முறை குறிவைக்கப்பட்டுள்ளன... இந்தத் தகவலை அமெரிக்காவை தளமாகக் கொண்ட சீனா விண்வெளி ஆய்வு நிறுவனம் (CASI) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் இந்திய செயற்கைக்கோள் மீது சீனா இந்த தாக்குதலை நடத்தியது. இந்த இணைய தாக்குதல்கள் செயற்கைக்கோள் அமைப்புகளை பாதிக்காது என்பதை இஸ்ரோ உறுதி செய்தது.
புவிசார் ஒத்திசைவு சுற்றுப்பாதையில் (GEO) விண்வெளி அமைப்புகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் பல விண்வெளி தொழில்நுட்பங்கள் சீனாவிடம் உள்ளதாக சி.ஏ.எஸ்.ஐ வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. மறுபுறமோ, 2019ஆம் ஆண்டில், தனது செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை தொழில்நுட்பத்தின் திறன்களை நிரூபித்த இந்தியா, தன்னிடம் எதிரிகளின் செயற்கைக்கோள்களை அடித்து நொறுக்கும் திறன் கொண்டது' என்பதைக் காட்டியது.
நாடுகளின் செயற்கைக்கோள் அமைப்புகள் மீது சீனாவின் கண்
சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் (PLA) தனது 'எதிரியின் பார்வைக்கோ காதுக்கோ தெரியாமல்' தாக்கும் தொழில்நுட்பத்தை தொடர்ந்து உருவாக்கி வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தரையில் அமைக்கப்பட்டுள்ள தளத்திலிருந்தே இதுபோன்ற சைபர் தாக்குதல்களைச் செய்யும் திறனை சீனா வைத்துள்ளதாகவும், இதன் மூலம் விண்கலம் உள்ளிட்ட செயற்கைக்கோள்களை அந்நாடு கட்டுப்படுத்தவோ அல்லது கடத்தவோ முடியும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
Also Read | China hackers இந்திய அரசின் வலைத்தளங்களை குறிவைக்கலாம் என பாதுகாப்பு அமைப்புகள் கவலை
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மெய்யான கட்டுப்பாட்டு வரியின் (LAC) யில் சிக்கல்கள் தொடரும் நேரத்தில் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது கவலைகளை அதிகரித்துள்ளது.
எல்.ஏ.சி மீதான சீன நடவடிக்கைகளை துல்லியமாக கண்காணிக்க இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பிரத்யேகமான செயற்கைக்கோள்கள் குறைந்தபட்சம் நான்கு தேவை என்று பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த எண்ணிக்கை 6 என்ற அளவில் இருப்பது உகந்ததாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதோடு, கண்காணிப்புக்கு 'உயர் தெளிவுத்திறன் கொண்ட சென்சார்கள் மற்றும் கேமராக்கள்' தேவை என்று கூறப்படுகிறது.