இட்டாநகர்: லடாக் (Ladakh) ஆக்கிரமிப்பில் இந்தியா தரப்பில் இருந்து சரியான பதிலடிக்குப் பிறகு சீனா இப்போது அருணாச்சல பிரதேச பிராந்தியத்தில் புதிய பிரச்சனையை கிளப்ப தயாராகி வருகிறது. அருணாச்சல பிரதேச (Arunachal Pradesh) மாநிலத்தில் சீனா எல்லைக்கு அருகில் வசிக்கும் மக்கள், கிராமத்தை விட்டு வெளியேற்றியதாக தகவல்கள் வந்துள்ளன. ஏற்கனவே அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத்தின் (Southern Tibet) ஒரு பகுதி என சீனா தொடர்ந்து கூறிவருகிறது.
இத்தகைய சூழ்நிலையில், இந்த பகுதியில் சீனாவின் எந்த ஒரு அத்துமீறலையும் மேற்கொள்ளலாம் என்பதை மறுக்க முடியாது. மூன்று நாட்களுக்கு முன்பு, காணாமல் போன அருணாச்சல பிரதேசத்தைச் (Arunachal Pradesh) சேர்ந்த ஐந்து இளைஞர்கள் தங்கள் எல்லைக்குள் இருப்பதாக சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் (PLA) தெரிவித்தது. இப்பகுதியை தங்கள் பகுதியாக அறிவித்தது.
தவாங்கின் ஒரு பகுதியை சீனாவின் ஆக்கிரமிப்பு:
அருணாச்சல பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் ஜிம்தாங் வட்டத்தில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தகாசங் கிராமம் சமீபத்தில் கிராமவாசிகளால் வெளியேற்றப்பட்டதாக வடகிழக்கின் ஈஸ்ட் மோஜோ வலைத்தளம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. 1986 ஆம் ஆண்டில், சீன இராணுவம் தவாங்கில் உள்ள ஜிம்தாங் பள்ளத்தாக்கின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதாக அறிக்கை கூறியது.
ALSO READ |
எல்லையில் படைகளைக் குவிக்கும் சீனா: போருக்கான ஆயத்தமா?
கடத்தப்பட்ட 5 அருணாசல இளைஞர்கள் இங்குதான் உள்ளார்கள்: உறுதிபடுத்தியது சீனா!!
அப்போது இந்தியா போராட்டத்தை நடத்தியது:
26 ஜூன் 1986 அன்று, இப்பகுதியில் சீன துருப்புக்கள் (Chinese Army) ஆக்கிரமிப்பதை எதிர்த்து சீன அரசாங்கத்திற்கு இந்தியா எச்சரிக்கை அனுப்பியது. இருப்பினும், எப்பொழுது போலவே, சீன அரசாங்கம் அத்தகைய ஊடுருவலை நிராகரித்தது. மெக்மஹோன் கோட்டிற்கு வடக்கே தனது படைகள் இருப்பதாக சீனா கூறியிருந்தது.
சீனா கூறுகிறது - அருணாச்சல் எங்களுக்கு சொந்தமானது:
சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் பெய்ஜிங்கில் செய்தியாளர் சந்திப்பில், சீன-இந்தியா எல்லையின் கிழக்குத் துறை அல்லது ஜாங்னான் (சீனாவின் ஜிஜாங்கின் (திபெத்) தெற்குப் பகுதி) குறித்து சீனாவின் நிலைப்பாடு சீரானதாகவும் தெளிவாகவும் உள்ளது என்று கூறினார். அவர் ஒரு படி மேலே சென்று அருணாச்சல பிரதேசம் என்று அழைக்கப்படுவதை சீன அரசாங்கம் ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை என்று கூறினார்.
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இருந்து 5 இந்தியர்களை சீனா கடத்தியது:
கடந்த வெள்ளிக்கிழமை, சீன இராணுவம் 5 இந்திய பொதுமக்களை துப்பாக்கி முனையில் கடத்தியது. இந்தியா மீண்டும் மீண்டும் விசாரித்த பிறகும், சீன அரசாங்கமும் இராணுவமும் அவர்கள் எங்களிடம் இல்லை என்று மறுத்தன. இந்த ஐந்து இளைஞர்களும் இந்திய இராணுவத்தின் போர்ட்டராக பணியாற்றியதாக அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் கூறினர். செப்டம்பர் 7 ஆம் தேதி, சீன இராணுவம் இந்த இளைஞர்கள் தங்கள் காவலில் இருப்பதாகவும் அவர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவதாகவும் ஒப்புக்கொண்டனர்.