Meghan Markle மீது விசாரணை; ஆனால், பாலியல் முறைகேடு குற்றம்சாட்டபட்ட இளவரசர் ஆண்ட்ரூ?

பக்கிங்ஹாம் அரண்மனை மேகன் மார்க்கலுக்கு எதிராக விசாரணையைத் தொடங்க அழைப்பு விடுத்தது, ஆனால், இளவரசர் ஆண்ட்ரூ விசாரிக்கப்படுவாரா என்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 5, 2021, 08:19 PM IST
  • இங்கிலாந்து அரசக் குடும்பம் மீது மீண்டும் இரட்டை நிலைப்பாடு குறித்த குற்றச்சாட்டு
  • குற்றம் சாட்டப்பட்ட மருமகள் மேகன் மீது விசாரணை
  • ஆனால், இளவரசர் ஆண்ட்ரு மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து மெளனம்
Meghan Markle மீது விசாரணை; ஆனால், பாலியல் முறைகேடு குற்றம்சாட்டபட்ட இளவரசர் ஆண்ட்ரூ? title=

பக்கிங்ஹாம் அரண்மனை மேகன் மார்க்கலுக்கு எதிராக விசாரணையைத் தொடங்க அழைப்பு விடுத்தது, ஆனால், இளவரசர் ஆண்ட்ரூ விசாரிக்கப்படுவாரா என்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

'இரட்டைத் நிலைப்பாடு' எடுப்பதாக மீண்டும் ஒருமுறை பக்கிங்ஹாம் அரண்மனை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது. மேகன் மார்க்கலுக்கு (Meghan Markle) எதிரான கொடுமைப்படுத்துதல் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது, ஆனால் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளில் வாய்மூடி மெளனமாக இருந்து வருகிறது இங்கிலாந்து அரசக் குடும்பம்.

இங்கிலாந்து அரசக் குடும்பத்தின் சுயசரிதையான 'Finding Freedom' என்ற புத்தகத்தை எழுதிய கரோலின் டுராண்ட்  ஸ்கை நியூஸ் (Sky News) பத்திரிகையிடம் இது குறித்து பேசினார். மார்க்லே மற்றும் இளவரசர் ஆண்ட்ரூ ஆகியோரின் விவகாரத்தில் "நிறைய இரட்டை தரநிலைகளை" பக்கிங்ஹாம் அரண்மனை எடுப்பதாக தெரிவித்தார்.

Also Read | ஹாரி & மேகன் மார்கெல் திருமணம் முதல் Megxit வரை

"கொடுமைப்படுத்துதல் குறித்து மெர்க்கல் மீது விசாரணை நடத்தப்படும், ஆனால் இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) மீதான குற்றச்சாட்டுகளைப் பற்றிய விசாரணை ஏன் முன்னெடுக்கப்படவில்லை" என்று டுராண்ட் கேள்வி எழுப்புகிறார்.

"அமெரிக்க அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறு அவருக்கு ஏன் அறிவுறுத்தப்படவில்லை? இளவரசர் ஹாரியின் இராணுவ கெளரவங்கள் ஏன் பறிக்கப்பட்டன, ஆனால் இளவரசர் ஆண்ட்ரூவிடம் ஏன் அந்த போக்கு கடைபிடிக்கப்படவில்லை?" என்று பல கேள்விகளை அவர் அடுக்கடுக்காக சுமத்துகிறார். 

மார்க்லே அரசக் குடும்பத்தில் இருந்தபோது, தனது பணியின்போது முன்னாள் ஊழியர்களில் இருவரை கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அது குறித்து அரசக் குடும்பம் விசாரணையைத் தொடங்கியதாக தெரியவந்துள்ளது.  
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட மார்கல், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

Also Read | சிவன் எதற்காக ஏன், எப்போது மூன்றாவது கண்ணைத் திறந்தார்?

தனக்கு 17 வயதாக இருந்தபோது, இளவரசர் ஆண்ட்ரூவுடன் (Epstein) உடலுறவு கொள்ள எப்ஸ்டீன் பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டியதை அடுத்து இளவரசர் ஆண்ட்ரூ பாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார்.

ஆனால் பக்கிங்ஹாம் அரண்மனை ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடவில்லை. 2019 நவம்பரில் பிபிசி செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில், தன்  மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை இளவரசர் ஆண்ட்ரூ மறுத்தார். 

பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சியான ஓப்ரா வின்ஃப்ரே (Oprah Winfrey) நேர்காணலில் மெர்கல் தம்பதியினர் கலந்துக் கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்படவுள்ள அந்த நிகழ்ச்சியை காண உலகமே மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அரசக் குடும்பத்துடனான உரசல் குறித்து மெர்கல் தம்பதிகள் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. 

Also Read | தங்க நாக்குகளுடன் 2000 ஆண்டுகள் பழமையான மம்மிகள் கண்டுபிடிப்பு  

அந்த நிகழ்ச்சியின் பல டீஸர்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், அரசக் குடும்பம் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவித்திருப்பது கோடிட்டுக் காட்டப்படுகிறது. மார்க்லும் இளவரசரும் அரசக் குடும்பத்தில் இருந்து வெளியேறுவதைப் பற்றி நேர்மையாகப் பேசியிருக்கலாம் என்றும், இந்த நீண்ட நேர்காணல் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்றும் கூறப்படுவதால், எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிறது.  

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற  ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News