நேபாள பிரதமருக்கு வலுக்கும் எதிர்ப்பு: இந்திய எல்லை சோதனை சாவடி நீக்கம்...!!!

நேபாள பிரதமர் சர்மா ஒளிக்கு எதிராக எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில்,  உத்தரகண்ட் அருகே உள்ள 2 புதிய எல்லை சோதனை சாவடிகளை நீக்கியுள்ளது.

Last Updated : Jul 6, 2020, 07:36 PM IST
  • நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலியின் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு, ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் (NCP) உள்ளவர்களே எதிர்ப்பு தெரிவித்தனர்.
  • இந்தியாவில் உள்ள பித்தோராகர் மாவட்டத்தின் காலாபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா பகுதிகள் நேபாள பிரதேசங்கள் என்று நேபாள பிரதமர் ஒளியின் அரசு கூறியது
  • நேபாளத்தின் இந்த நடவடிக்கை ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நேபாள பிரதமருக்கு வலுக்கும் எதிர்ப்பு: இந்திய எல்லை சோதனை சாவடி நீக்கம்...!!! title=

பித்தோராகர் (Pithoragarh) மாவட்டத்தில் உள்ள தார்ச்சுலா(Dharchula) நகரத்துடன் லிபுலேக் பாஸை (Lipulekh Pass ) இணைக்கும்  முக்கியத்துவம் வாய்ந்த சாலையை இந்தியா திறந்து வைத்ததையடுத்து, புது தில்லியுடனான உறவில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, ஒரு மாதத்திற்கு முன்பு ஆறு புதிய எல்லை சோதனை சாவடிகளை  நேபாளம் அமைத்தது.

உத்தரகண்ட் (Uttarakhand) மாநிலத்தின் பித்தோராகர் மாவட்டத்தின் தர்ச்சுலா பகுதிக்கு அருகே இந்தியாவின்( India) எல்லையில் அமைக்கப்பட்ட ஆறு புதிய எல்லை புறக்காவல் நிலையங்களை நிர்வகித்து வந்த நேபாள ஆயுத காவல்துறை, அவற்றில் சிலவற்றை சில நாட்களுக்கு முன்பு நீக்கிவிட்டதாக  மாநில அரசு அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

ALSO READ | குவைத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா: 8 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பும் அபாயம்

நேபாள பிரதமர் கே.பி. சர்மா (KP. Sharma Oli) ஓலியின் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு,  ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் (NCP) உள்ளவர்களே எதிர்ப்பு தெரிவித்தனர். ஒளியின் எதிர்காலத்தை தீர்மானிக்க என்.சி.பியின் நிலைக்குழு திங்களன்று ஒரு கூட்டத்தை நடத்த இருந்தது. ஆனால் அது புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, இந்தியாவில் உள்ள பித்தோராகர் மாவட்டத்தின் காலாபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா பகுதிகள் நேபாள பிரதேசங்கள் என்று நேபாள பிரதமர் ஒளியின் அரசாங்கம் கூறியது. நேபாள நாடாளுமன்றம் அதில் உள்ள மூன்று பகுதிகளை தங்கள் நாட்டின் பகுதிகளாக காட்டும் புதிய வரைபடத்தையும் வெளியிட்டது

இபோது இரண்டு எல்லை சோதனை சாவடிகள் நீக்கப்பட்டதோடு, புதிதாக அமைக்கப்பட்ட மூன்று நேபாள எல்லை சோதனை சாவடிகளும் விரைவில் அகற்றப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மிக முக்கிய முன்னேற்றமாகும்.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள இந்திய-நேபாள உறவுகள் குறித்த வல்லுநர்கள் இருதரப்பு உறவுகளில் உள்ள பதற்ற நிலைக்கு  மத்தியில் நேபாளத்தின் இந்த நடவடிக்கை ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை என கூறுகின்றனர்.

ALSO READ | இந்தியாவின் பராக்கிரமத்தை கண்டு அஞ்சி  லடாக்கில் பின் வாங்கும் சீனா...!!!

 

நேபாளத்தின் புறக்காவல் நிலையங்களை நீக்குவது  தொடர்பான முடிவு, பிரதமர் ஒளி அரசு மேற்கொள்ளும் இந்தியாவை நோக்கிய அணுகுமுறையின் மாற்றம் ஏற்பட்டுள்ளதை குறிக்கிறது என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Trending News