சவுதி அரேபியா: சவுதி அரேபியாவில் உம்மு ஜிர்சான் பகுதியில் சுமார் 1.5 கி.மீ நீளமுள்ள எரிமலை குகை முழுவதும் பரவிக்கிடந்த எலும்புகளின் மிகப்பெரிய குவியல் தொகுப்பை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பின் போது வெளியேறிய லாவா குழம்பால் உருவான இந்த குகைக்குள் மனிதர்கள் உட்பட நூறாயிரக்கணக்கான விலங்குகளின் எலும்புகள் குவிந்து கிடந்தன. இந்த எலும்புகள் சுமார் 7,000 வருடங்களாக கழுதை புலிகளால் சேகரிக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த எலும்பு குவியலில் கால்நடைகள், ஒட்டகங்கள், குதிரைகள், கொறித்துண்ணிகள், கேப்ரிட்கள் உள்ளிட்ட பல வகை விலங்குகளின் எலும்புகள் மட்டுமல்லாமல் மனித மண்டை ஓட்டின் எச்சங்களும் அடங்கியுள்ளன.
குகையில் 1,917 எலும்புகள் மற்றும் பற்களை மீட்ட தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், அவற்றில் சில மாதிரிகள் மீது ரேடியோ கார்பன் டேட்டிங் செய்தபோது, அவை சுமார் 439 முதல் 6,839 ஆண்டுகள் பழமையானவை என்பதைக் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இங்கு கிடைத்துள்ள எலும்புகளில் உள்ள வெட்டுக்கள், கீறல்கள் போன்ற அடையாளங்களை கொண்டு ஆய்வு செய்ததில், இந்த எலும்புகள் முதன்மையாக கழுதைபுலிகளால் சேகரிக்கப்பட்டவை என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.
ALSO READ சத்தியமங்கலத்தில் உள்ள புலிகள் காப்பகத்தில் 125 வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளன
இதில், குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த எலும்பு குவியல்களில் கழுதைப்புலிகளின் எலும்புகளும் உள்ளன. உம்மு ஜிர்சான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த எலும்பு குவியல்கள் பண்டைய அரேபியாவின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தை பற்றி புரிந்துகொள்ள உதவும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தொல்லியல் ஆய்வில் ஹைனாக்களால் சேகரிக்கப்பட்ட எலும்பு குவியல்கள் உம்மு ஜிர்சன் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது முதல் முறை அல்ல. இதற்கு முன்பே 1942ம் ஆண்டு செக் குடியரசில் சர்ப்ஸ்கோ க்ளம் பகுதியில் உள்ள கோமின் குகையில் இதுபோன்ற மற்றொரு எலும்பு சேகரிப்பு குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe