Lockdown Boosted Immunity : கோவிட் நோய், உலகில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன் - பின் என இரு பிரிவுகளாக பிரித்து பேசும் போக்கை பார்க்கிறோம். அந்த அளவுக்கு, தொழில், வேலை, ஆரோக்கியம் என பல்வேறு விஷயங்களிலும் கொரோனா ஏற்படுத்தியுள்ள மாற்றங்களை கண்கூடாக பார்க்கிறோம். கொரோனா, கோவிட் ஆகியவை அன்றாட செயல்களிலும், நீண்ட கால விஷயங்களிலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளன.
இந்த மாற்றங்களில் ஆரோக்கியம் தொடர்பான மாற்றங்கள் முன்னிலை வகிக்கின்றன. அதில், ஆய்வுகள் காட்டும் சில முடிவுகள் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுப்பதாக இருக்கின்றன. அந்த வகையில், கோவிட் காலத்திற்கு முன் பிறந்த குழந்தைகளுடன், கொரோனா வைரஸ் பரவிய காலத்திலும், அதற்கு பிந்தைய காலகட்டத்திலும் பிறந்த மற்றும் பிறக்கும் குழந்தைகள் தொடர்பான ஆய்வுகள் முக்கியமானவை.
குழந்தைகளிடம் ஆய்வு
ஒவ்வாமை
கோவிட்க்கு முந்தைய குழந்தைகளில் பிறந்த குழந்தைகளில் ஒரு வயதிற்கு முன்னதாக 22.8 சதவீதத்தினருக்கு ஒவ்வாமை ஏற்படும். ஆனால், கோவிட் காலத்தில் பிறந்த குழந்தைகளில் ஐந்து சதவீதத்தினருக்கு மட்டுமே ஒரு வயதிற்குள் உணவு ஒவ்வாமை ஏற்பட்டது.
மேலும் படிக்க | எடை இழப்புக்கு காரணமான புரத உணவுகள்! உலக உடல் பருமன் தினத்தில் இனிப்புச் செய்தி!
ஒவ்வாமை குறைந்ததற்கான காரணம் என்ன?
இந்த ஆய்வு முடிவுகள் Allergy மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கான காரணத்தை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கர்ப்பமாக இருந்த தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான நுண்ணுயிரிகளை அனுப்பியதே அதற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.
அதாவது, கொரோனா காலத்தில் உணவு மற்றும் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. அந்த கவனமான காலகட்டம், கருவில் இருந்த குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்ததாக தெரிய வந்துள்ளது.
பாதகமே சில சமயங்களில் சாதகமாக மாறும் என்பதை நிரூபிக்கும் ஆய்வு இது. COVID-19 தொற்றுநோய்களின் போது பிறந்த குழந்தைகளின் உயிரியல் மாற்றங்கள் ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
அலர்ஜி (Allergy) வெளியிட்ட ஆய்வின்படி, கோவிட் குழந்தைகளுக்கு மாற்றப்பட்ட குடல் நுண்ணுயிரி உள்ளது. அதாவது, அவர்களின் குடலில் உள்ள நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்களின் அமைப்பு செரிமானத்திற்கு உதவுகிறது என்பதும், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை நீக்குகிறது என்பதால், அவர்கள் தவழும்போதும், நடைபயிலும்போதும் ஏற்படும் உணவு ஒவ்வாமையைக் குறைக்கிறது.
மேலும் படிக்க | உங்கள் குழந்தை ஆக்டிவாக இல்லையா? ‘இந்த’ யோகாசனங்கள் செய்தால் சுட்டியா மாறிடுவாங்க
அயர்லாந்து குழந்தைகளிடம் ஆய்வு
அயர்லாந்தில் உள்ள கார்க் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக் குழுவின் இந்த ஆய்வு, 2020ம் ஆண்டு மார்ச் மற்றும் மே க்கு இடையில் கோவிட்-19 தொற்றுநோயின் முதல் மூன்று மாதங்களில் பிறந்த 351 குழந்தைகளின் மல மாதிரிகளை பகுப்பாய்வு செய்ததில் கிடைத்த முடிவு இது.
குடல் பாக்டீரியா
குடல் பாக்டீரியா மாற்றங்கள் தொற்றுநோய்க்கு முன் பிறந்த குழந்தைகளை விட இந்த கோவிட் குழந்தைகளுக்கு எதிர்பார்த்ததை விட குறைவான ஒவ்வாமை நிலைகள் இருப்பதாக ஆராய்ச்சி குழு கண்டறிந்துள்ளது. இதனால் கோவிட் காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் குறைவாகவே பயன்படுத்தினால் போதும் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
சமூக தனிமைப்படுத்தல்
இந்த ஆய்வின் மூத்த ஆய்வாளர் லியாம் ஓ'மஹோனி, இது ஒரு "கவர்ச்சிகரமான விளைவு" என்று கருதுகிறார். இந்த ஆய்வு குடல் நுண்ணுயிரியில் ஆரம்பகால வாழ்க்கையில் சமூக தனிமைப்படுத்தலின் தாக்கம் குறித்த புதிய கண்ணோட்டத்தை வழங்குகிறது. குறிப்பாக, புதிதாகப் பிறந்த குழந்தைகளிடையே ஒவ்வாமை விகிதம் குறைவாக உள்ளது.
லாக்டவுன் காலத்தில் வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளினால் தனிமனிதர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.
மேலும் படிக்க | பிளாட் வயிறு, நச்சுனு இடுப்பு, ஒல்லியான உடம்பு வேண்டுமா... இதை செய்யுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ