Duvalius Dokovici: சிட்டாய் பறக்கும் பூச்சிக்கு நோவக் ஜோகோவிச் என பெயர்: செர்பியா

Novak Djokovic Beetle: செர்பிய டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச்சின் பெயரை, அந்நாட்டு விஞ்ஞானிகள் ஒரு வண்டுக்கு சூட்டியுள்ளனர்... காரணம் ஆச்சரியமானது....

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 10, 2022, 06:27 AM IST
  • காமெடி கீமெடி எதுவும் பண்ணலையே! ஜெர்க்காகும் ஜோகோவிச்
  • வண்டுக்கு பெயர் கொடுத்த செர்பிய டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச்
  • விஞ்ஞானிகள் ஏன் குருட்டு வண்டுக்கு பிரபல டென்னிஸ் நட்சத்திரத்தின் பெயரை வைத்தார்கள்?
Duvalius Dokovici: சிட்டாய் பறக்கும் பூச்சிக்கு நோவக் ஜோகோவிச் என பெயர்: செர்பியா title=

Novak Djokovic Beetle: செர்பிய டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச்சின் பெயரை, அந்நாட்டு விஞ்ஞானிகள் ஒரு வண்டுக்கு சூட்டியுள்ளனர். இந்தப் பூச்சியானது தரை வண்டுகளின் டுவாலியஸ் வகையைச் சேர்ந்தது. ஏன் வண்டுக்கு பிரபல டென்னிஸ் நட்சத்திரத்தின் பெயர் சூட்டப்பட்டது என்று அனைவருக்கும் கேள்வி எழுகிறது. அதற்கான விளக்கத்தையும் விஞ்ஞானிகள் தந்துள்ளனர். பூச்சியின் சுறுசுறுப்பு மற்றும் உறுதியான தன்மைக்காக இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. டுவாலியஸ் டோகோவிசி (Duvalius Dokovici) என்று பெயரிட்டுள்ள விஞ்ஞானிகள், டென்னிஸ் நட்சத்திரம் சுறுசுறுப்பு மற்றும் உறுதியான தன்மைக்காக அறியப்படுபவர் என்பதால் இப்படி பெயரிட்டிருப்பதாக கூறுகின்றனர்.  

செர்பியாவில் உள்ள விஞ்ஞானிகள் பூச்சியின் வேகம், வலிமை, நெகிழ்வுத்தன்மை, ஆயுள் மற்றும் கடினமான சூழலில் உயிர்வாழும் திறன் ஆகியவற்றைக் கூறி, தங்கள் நாட்டின் புகழ்பெற்ற டென்னிஸ் நட்சத்திரமான நோவக் ஜோகோவிச்சின் பெயரை ஒரு வண்டுக்கு வைத்துள்ளதாக சொல்லியிருப்பது சுவாரசியமான தகவலாக இருக்கிறது.

மேலும் படிக்க | இனி டென்னிஸ் விளையாட மாட்டேன்: ரோஜர் ஃபெடரரின் முடிவும் சக வீரர்களின் கண்ணீரும்

இந்த பூச்சி ஐரோப்பாவில் இருக்கும், தரை வண்டுகளின் டுவாலியஸ் இனத்தைச் சேர்ந்தது என்றும், இந்த வண்டுக்கு டுவாலியஸ் டோகோவிசி என்று விளையாட்டு வீரர் ஜோகோவிச்சின் பெயர் இடப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர் நிகோலா வெசோவிக் தெரிவித்துள்ளதாக உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

டுவாலியஸ் டோகோவிசி வண்டு, நிலத்தடி கோலியோப்டெரா பூச்சியாகும். இது நிலத்தின் அடியில் ஆழமான பகுதிகளில் வாழும் ஒரு வண்டு இனம் ஆகுக்ம். "புதிய இனத்திற்கு ஜோகோவிச்சின் பெயரை வைக்க நான் முன்மொழிந்தேன்," என்று வெசோவிக் தன்ஜுக் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

“இந்த நாட்டிற்காக நிறைய செய்தவர் நோவாக் ஜோகோவிச். அவரின் வேகம், வலிமை, நெகிழ்வுத்தன்மை மற்றும் கடினமான சூழலிலும் சிறப்பாக செயல்படும் பாங்கு ஆகியவற்றின் அடிப்படையில், அதே தன்மைகள் கொண்ட வண்டுக்கு அவரது பெயரை வைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | நோவக் ஜோகோவிச் 8வது முறையாக விம்பிள்டனின் இறுதிப் போட்டியில்

"பால்கன் நாட்டின் மேற்கில் உள்ள லுபோவிஜா நகருக்கு அருகிலுள்ள குழியில் காணப்படும் ஒரு சிறப்பு வகை  நிலத்தடி வண்டு இது. கண் பார்வை இல்லாவிட்டாலும் சிறப்பாக வேட்டையாடக்கூடியது" என்று இன்ஸ்டாகிராம் பதிவில், விஞ்ஞானி பூச்சியைப் பற்றி விவரித்துள்ளார்.

இந்த கண்டுபிடிப்பை "Annales Zoologi Fennici" இதழில் விஞ்ஞானி Vsevic வெளியிட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, மாண்டினீக்ரோவில் உள்ள ஒரு நன்னீர் நத்தைக்கு டென்னிஸ் நட்சத்திரத்தின் பெயர் சூட்டப்பட்டது. 

இதற்கிடையில், இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு, ஜோகோவிச் இறுதியாக அதிரடிக்குத் திரும்பினார். 21 கிராண்ட்ஸ்லாம் கோப்பைகளை வென்ற 35 வயதான டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச், ஜூலை மாதம் ஏழாவது விம்பிள்டன் கிரீடத்தை வென்ற பிறகு, சமீபத்தில் டெல் அவிவ் ஓபனை வென்றார். இது, இந்த சீசனில் அவரது மூன்றாவது பட்டம் ஆகும்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, அவர் அஸ்தானா ஓபனின் காலிறுதியில் கரேன் கச்சனோவுக்கு எதிராக விளையாடினார். ஜோகோவிச் ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை நேர் செட்களில் வென்றதன் மூலம் தனது தொழில் வாழ்க்கையின் 90வது பட்டத்தையும், 2022ம் ஆண்டின் நான்காவது பட்டத்தையும் பெற்றார்.

மேலும் படிக்க | டிசிஎஸ்ஸில் வேலை வேண்டுமா? இதோ விவரமான வழிமுறைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News