HIV நோயிலிருந்து குணமடைந்த பெண்; சாத்தியமாக்கிய எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை

HIV எய்ட்ஸ் சிகிச்சையில் விஞ்ஞானிகள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர். ஹெச்.ஐ.வி நோயில் இருந்து குணமான முதல் பெண்மணி என்ற பெருமையை ஒரு அமெரிக்க பெண்மணி பெற்றுள்ளனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 16, 2022, 04:28 PM IST
  • HIV நோயில் இருந்து குணமான முதல் பெண்மணி
  • முன்னதாக AIDS நோயில் இருந்து 2 பேர் மட்டுமே குணமடைந்திருந்தனர்
  • ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை மூலம் சாதித்துள்ள மருத்துவர்கள்.
HIV நோயிலிருந்து குணமடைந்த பெண்; சாத்தியமாக்கிய எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை title=

வாஷிங்டன்: HIV என்று அழைக்கப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்திகளை அழிக்கும் நோய் (Human Immuno Deficiency Virus), மிகவும் கொடிய வைரஸ் ஆகும். இந்த தொற்று ஏற்பட்டால் மரணம் நிச்சயம் என்ற நிலையில், இது இதுவரை குணப்படுத்த முடியாததாக கருதப்பட்டது. ஆனால் விஞ்ஞானிகள் இந்த வகையில்  பெரும் வெற்றியை அடைந்துள்ளனர். ஸ்டெம்செல் அறுவை சிகிக்சை மூலம்  இது சாத்தியம் ஆகியுள்ளது.

அமெரிக்காவில் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் முழுமையாக குணமடைந்து, HIV தொற்றில் இருந்து குணமடைந்த முதல் பெண்மணி என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலகில், ஹெச் ஐ வி நோயால் குணமான இந்த அமெரிக்க பெண்ணையும் சேர்த்து இதுவரை மூன்று பேர் மட்டுமே ஹெச்.ஐ.வி தொற்று நோயில் இருந்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தி பர்னில் நோயாளி என்று அழைக்கப்படும் திமோதி ரே பிரவுன் என்பவர், HIV நோயிலிருந்து குண்டைந்து 12 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். பின்னர் 2020 ஆண்டு புற்றுநோயால் இறந்தார். 2019 ஆம் ஆண்டில், HIV நோயால் பாதிக்கப்பட்ட ஆடம் காஸ்டிலிஜோவுக்கும் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு அவரும் குணமடைந்தார்.

மேலும் படிக்க | Cancer: புற்று நோய் அண்டாமல் இருக்க ‘இந்த’ மசாலாவை உணவில் தினமும் சேர்க்கவும்!

கடந்த 2013ம் ஆண்டு, இந்த அமெரிக்க பெண்ணிற்கு  எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறூதியானது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இவருக்கு லுகேமியா என்னும் ரத்த புற்று நோய் இருப்பதும் கண்டறியப்பட்டது.  இரத்த புற்றுநோய்க்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை சிகிச்சை மூலம் சிகிச்சையளிக்கப்பட்டது. ​​மருத்துவர்கள் தொப்புள் கொடி ரத்தம் மூலம் சிகிச்சை கொடுத்தனர்.  ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதில், HIV வைரஸுக்கு எதிராக இயற்கையான எதிர்ப்பைக் கொண்ட ஒருவரின் ஸ்டெம் செல்கள் தானம் பெறப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.   

மேலும் படிக்க | Weight loss Tips: உடல் எடை குறைய தினசரி பழக்கத்தில் ‘சில’ சிறிய மாற்றங்களே போதும்!

அப்போது, சிகிச்சை பெறும் பெண்ணின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க,  நெருங்கிய உறவினர்களும், ரத்த தானம் செய்தனர். கடந்த 4 ஆண்டுகளில் அவர் இரத்தப் புற்றுநோயிலிருந்து முற்றிலும் குணமடைந்தார். 

பின்னர் 14 மாதங்களுக்கு அவரது உடல் நிலையை கண்காணித்ததில் ஹெச் ஐ வி தொற்று பாதிப்பு திரும்பவில்லை என்கின்றனர் மருத்துவர்கள். இதன் மூலம் எச்.ஐ.வி. தொற்றுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உலகிலேயே எச்.ஐ.வி. தொற்றிலிருந்து குணமடைந்த முதல் பெண் இவர் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | எச்சரிக்கை! அளவிற்கு அதிகமான பாராசிட்டமால் மருந்தால் மரணம் கூட சம்பவிக்கலாம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News