நீங்கள் கொரோனா Positive-வாக இருந்தால் இங்கு உங்களுக்குக் கிடைக்கும் 94 ஆயிரம் ரூபாய்!!

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு கௌண்டியில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டவர்களுக்கு 94 ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 10, 2020, 02:47 PM IST
  • சமீபத்திய தகவல்களின் படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியையும் தாண்டி விட்டது.
  • மக்களை ஏதாவது ஒரு வகையில் ஊக்கப்படுத்த அமெரிக்காவில் ஒரு வினோதத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
  • கொரோனா உறுதி செய்யப்பட்டும், தனிமைப்படுத்தலில் இருப்பதற்கான வசதி இல்லாதவர்கள் பலர் உள்ளனர்.
நீங்கள் கொரோனா Positive-வாக இருந்தால் இங்கு உங்களுக்குக் கிடைக்கும் 94 ஆயிரம் ரூபாய்!! title=

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. நாடுகளின் அரசாங்கங்கள் இதைத் தடுக்க வழி தெரியாமல் தவிக்கின்றன. சமீபத்திய தகவல்களின் படி, இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியையும் தாண்டி விட்டது. எழு லட்சத்தையும் விட அதிகமானோர் இறந்து விட்டனர். இதற்கான தடுப்பு மருந்தைத் தயாரிக்க பல நாடுகள் முயன்று வருகின்றன. எனினும் இன்னும் எந்த சாதகமான முடிவும் வெளி வரவில்லை.

இதற்கிடையில் அமெரிக்காவில் (America)  ஒரு நல்ல செய்தி பற்றிய அறிவிப்பு வெளி வந்துள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் (California) உள்ள ஒரு கௌண்டியில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டவர்களுக்கு 94 ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை பாதிக்கப்பட்டவருக்கு அவரது சிகிச்சை மற்றும் உணவுக்காக அளிக்கப்படுகிறது.

கலிஃபோர்னியாவின் அலமேடா கௌண்டி (Alameda County) இப்படிப்பட்ட ஒரு திட்டத்தைத் தீட்டியுள்ளது. இந்தத் திட்டம் பய்லட் என பெயரிடப் பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு 94 ஆயிரம் ரூபாய் பண உதவி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ALSO READ: நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி... Covid-19 தடுப்பூசி வெறும் ₹.225 மட்டுமே...!

சிலர் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள தயங்குவதாகவும், அப்படி செய்து கொண்டு தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தலில் இருக்கத் தயங்குவதாகவும் அந்த கௌண்டியின் நிர்வாகம் தெரிவித்தது. மக்கள் இப்படி நடந்து கொண்டால் கொரோனாவை முற்றிலுமாக நீக்க முடியாது என்பதால், மக்களை ஏதாவது ஒரு வகையில் ஊக்கப்படுத்த இந்தத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

கொரோனா உறுதி செய்யப்பட்டும், தனிமைப்படுத்தலில் இருப்பதற்கான வசதி இல்லாதவர்களும் பலர் உள்ளனர் என்றும், அவர்களுக்கும் இந்தத் திட்டம் மிக உதவியாக இருக்கும் என்றும் ஒரு அதிகாரி தெரிவித்தார்.

இந்தத் தொகையைப் பெற முதலில் ஒருவர் ஒரு கிளினிக்கில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்டால் அவருக்கு இந்தத் தொகை வழங்கப்படும். 

ALSO READ: கொரோனாவை வெல்ல வெறும் 48 மணி நேரம் மட்டுமே உள்ளது... ரஷ்யா கூறுவது என்ன?

Trending News