31 ஆண்டு சிறைதண்டனைக்கு பிறகு சகோதரர்கள் நிரபராதி என்று தெரியவந்தது!! அடுத்து என்ன?

செய்யாத குற்றத்திற்காக 31 ஆண்டுகள் சிறையில் கழித்த சகோதரர்களின் மனோநிலை என்னவாக இருக்கும்! இது கதையல்ல, அமெரிக்காவில் நடைபெற்ற உண்மைச் சம்பவம்!

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 18, 2021, 04:33 PM IST
  • 31ஆண்டு சிறைதண்டனைக்கு பிறகு சகோதரர்கள் நிரபராதி என்று தெரியவந்தது
  • இழப்பீடாக 84 மில்லியன் டாலர் கிடைத்தது
  • அமெரிக்காவின் நீதித்துறை வரலாற்றில் முக்கியமான வழக்கு
31 ஆண்டு சிறைதண்டனைக்கு பிறகு சகோதரர்கள் நிரபராதி என்று தெரியவந்தது!! அடுத்து என்ன? title=

செய்யாத குற்றத்திற்காக 31 ஆண்டுகள் சிறையில் கழித்த சகோதரர்களின் மனோநிலை என்னவாக இருக்கும்! இது கதையல்ல, அமெரிக்காவில் நடைபெற்ற உண்மைச் சம்பவம்!

தென் அமெரிக்க மாநிலமான வட கரோலினாவில் நடைபெற்ற வருத்தமான விஷயம் இது.  ஆனால் உண்மை வெளியானவுடன் செய்யாத குற்றத்துக்காக 31 வருட தண்டனை அனுபவித்தவரின் வழக்கறிஞர் சும்மா இருக்கவில்லை. 

தவறிழைக்காத சகோதரர்கள் இருவருக்கும் 84 மில்லியன் டாலர் இழப்பீட்டுத் தொகை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.   

Also Read | கொரோனாவினால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி

"இது அமெரிக்காவின் நீதித்துறை வரலாற்றில் முக்கியமான விஷயம். வழக்கு ஒன்றில் தவறான தண்டனை கொடுத்த ஜூரி தீர்ப்புக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது" என்று டெஸ் ஹோகன் (Des Hogan) என்ற வழக்கறிஞர் AFP செய்தி முகமையிடம் கூறினார்.

1983 ஆம் ஆண்டில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், ஹென்றி லீ மெக்கோலம் (Henry Lee McCollum) மற்றும் அவரது ஒன்றுவிட்ட  சகோதரர், லியோன் பிரவுன் (Leon Brown) இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் கொடுமை என்னவென்றால், இந்த சகோதரர்கள் இருவரின் ஐ.க்யூ மிகவும் குறைவு, அதாவது அவர்கள் திட்டமிட்டோ அல்லது அறிவார்ந்தோ செயல்பட முடியாதவர்கள்   (intellectually disabled).

குற்றம் சாட்டப்பட்ட பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை நடைபெற்று இருவரும் கைது செய்யப்பட்ட போது ஹென்றியின் வயது 19, பிரவுனின் வயது15. இருவரும் ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்திட நிர்பந்திக்கப்பட்டதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.

Also Read | 16 மனைவிகள் 151 குழந்தைகள், அடுத்த திருமணத்திற்கு ரெடி! 

பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் மற்றொரு மனிதன் இருந்ததாக டி.என்.ஏ ஆதாரங்கள் (DNA evidence) கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் 2014 ஆம் ஆண்டில் இந்த சகோதரர்களின் குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டன.

அதன் பிறகு மெக்கோலம் மற்றும் பிரவுன் ஒரு சிவில் உரிமைகள் வழக்கைத் (civil rights case) தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஒரு நடுவர் அவர்களுக்கு இழப்பீடு, சேதங்கள் மற்றும் வட்டி என மொத்தம் 84 மில்லியன் டாலர் இழப்பீட்டுத் தொகையை வழங்கி தீர்ப்பளித்தார்.  

"ஏழைகள், அபலைகள், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள்  என ஓரங்கட்டப்பட்டவர்களின் உரிமைகளை புறக்கணிக்கும் பழைய காலம் மாறிவிட்டது என்ற செய்தியை நடுவர் மன்றம் கொடுத்திருக்கிறது" என்று ஹோகன் கூறினார்.

வழக்கில் வெற்றிப் பெற்றதில் சகோதரர்கள் இருவருக்கும் மகிழ்ச்சி. தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை உறுதி செய்த நடுவர் மன்றத் தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாக கூறுகின்றனர்.  

Also Read | History Today: வரலாற்றின் பொன்னேடுகளில் May 18; முக்கியத்துவம் என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News