ஈரானுடனான அணு ஒப்பந்தம் முறிந்தது -டிரம்ப்!

இரானுடனான 2015-ல் செய்து கொண்ட அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக் கொள்ளும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்! 

Last Updated : May 9, 2018, 08:45 AM IST
ஈரானுடனான அணு ஒப்பந்தம் முறிந்தது -டிரம்ப்!  title=

இரானுடனான 2015-ல் செய்து கொண்ட அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக் கொள்ளும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்! 

ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது என தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது பற்றி 12 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என கடந்த 1-ம் தேதி டிரம்ப் அறிவித்தார். 

இதையடுது்து, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேற முடிவு செய்துள்ளது என அதிபர் டிரம்ப் தற்போது அறிவித்துள்ளார். இது சார்பாக அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளது...! 

ஈரான் ஒப்பந்தத்தில் குறைபாடு உள்ளது. எனவே, ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக முடிவு செய்துள்ளது எனவும், அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஆட்சியின் போது ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் தற்போதைய அதிபர் டெனால்டு டிரம்ப் முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி கூறுகையில், ''தனது ஒப்பந்த்தை மதிக்கப் போவதில்லை என அமெரிக்கா கூறியுள்ளது. அதனால், இரான் அணு எரிசக்தி அமைப்பை யுரேனியம் செறிவூட்டும் பணியை மீண்டும் தொடங்க தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

தனது கூட்டாளி நாடுகள் மற்றும் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிற நாடுகளுடன் பேசுவதற்காக அடுத்த சில வாரங்கள் காத்திருக்கப் போவதாகக் கூறியுள்ளார்...! 

 

Trending News