இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணியின் லோகேஷ் ராகுல், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 14 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது. 3-வது ஓவரை கிறிஸ் வோக்ஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ராகுல், பென் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அவர் 5 பந்தில் 5 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இந்திய ஏ அணி, இங்கிலாந்து லெவன் அணி மோதிய பயிற்சி ஆட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இந்திய சீருடையில் கேப்டனாக டோனியின் கடைசி ஆட்டம் இது என்பதால், அவரை பார்த்ததும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு. யுவராஜ் சிங்கிற்கு மீண்டும் வாய்ப்பு.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 4-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று கோப்பை வென்றது. ஒருநாள் தொடர் வரும் 15ம் தேதி புனேவில் தொடங்குகிறது.
இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கும் வரை ஓயமாட்டேன் என யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
புற்றுநோய் காரணமாக 2011-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டிக்கு பின்பு இந்திய அணியில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்(35) இடம்பெறாமல் இருந்தார். சிகிச்சைக்காக அமேரிக்கா சென்ற யுவராஜ் சிங், புற்றுநோயிலிருந்து முழுவதும் குணமாகினார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் இடம் பிடித்தார். காயம் காரணாமாக அரை இறுதி போட்டியோடு வெளியேறினார். ஐபிஎல் போட்டியிலும் அவர் விளையாட வில்லை அதன் பிறகு யுவராஜ் சிங்கிற்கு இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் மற்றும் மாடல் அழகியான ஹசல் கீச்க்கு இன்று திருமணம் நடைபெற உள்ளது, இந்நிலையில், நேற்று இரவு நடைபெற்ற சங்கீத் விழாவில் விராட் கோலி உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், பிரதமர் மோடியை திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அழைப்பு விடுப்பதற்காக வைத்திருந்த பத்திரிக்கையில் எழுத்து பிழையோடு இருந்தது
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி விசாகபட்டணத்தில் நடைபெற்றது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதில் வார்னர் மற்றும் ஷிகர் தவான், யுவராஜ் ஆகியோர் சிறப்பாக ஆடினர். இரண்டாவதாக பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் வெகு விரைவில் தங்கள் விக்கெட்டுக்களை இழந்து பரிதாபமான நிலையில் தோற்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.