இந்திய அணி அறிவிப்பு - யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு!!

Last Updated : Jan 6, 2017, 05:17 PM IST
இந்திய அணி அறிவிப்பு - யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு!! title=

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.  யுவராஜ் சிங்கிற்கு மீண்டும் வாய்ப்பு.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 4-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று கோப்பை வென்றது. ஒருநாள் தொடர் வரும் 15ம் தேதி புனேவில் தொடங்குகிறது. 

இந்நிலையில் இதுவரை ஒருநாள், டி20 போட்டிக்கு கேப்டனாக இருந்து வந்த மகேந்திர சிங் டோனி, நேற்று முன்தினம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய கேப்டனாக விராட் கோஹ்லி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருநாள் போட்டியில் யுவராஜ் சிங்கிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒருநாள் அணி வீரர்கள்:

விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், எம்எஸ் டோனி, மணிஷ் பாண்டே, கெதர் ஜாதவ், யுவராஜ் சிங், ரெஹானே, ஹர்திக் பாண்டியா, அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, அமித் மிஷ்ரா, ஜாஸ்பிரித் பும்ராக், புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ். 

20 ஓவர் அணி விபரம்:

விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், மந்தீப் சிங், எம் எஸ் டோனி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அஸ்வின், ஜடேஜா, யுஸ்வேந்திர ஷாகால், மணிஷ் பாண்டே, ஜாஸ்பிரித் பும்ராக், புவனேஷ்வர் குமார், ஆஷிஷ் நேக்ரா. ரிஷாப் பந்த்.

Trending News