இந்தியாவில் மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டில் 2016 ஆம் ஆண்டைவிட 24% குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது!
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஜிகா வைரஸ் இந்தியாவிலும் 3 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது.
அமெரிக்கா, ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய ஜிகா வைரஸ், தற்போது குஜராத் மாநிலத்தை சேர்ந்த கர்ப்பிணி உட்பட 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்ததை சோதனைகள் மூலம் உறுதிப்படுத்தி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை அனுப்பி உள்ளது.இதனை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
இந்தியாவில் ஜிகா பாதிப்பு இல்லை என கூறப்பட்டு வந்த நிலையில், இந்த சம்பவத்தால் பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொசுக்கடியால் தொற்றி கிருமிதான் ‘ஜிகா’ வைரஸ். உகாண்டாவில் உள்ள ஜிகா (Zika) என்ற காட்டில் குரங்குகளை தாக்கியபோதுதான், இந்த கிருமி பற்றி 1947-ம் ஆண்டு தெரியவந்தது.
அதன் பின்னர், இந்த வைரஸ் 1952-ம் ஆண்டு உகாண்டாவிலும் தான்சானியாவிலும் மனிதர்களையும் தாக்கியது. 2007 மற்றும் 2013-ம் ஆண்டுகளில், பசிபிக் நாடுகளில் ‘ஜிகா’ வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகள் தென்பட்டது.
அமெரிக்க நாடுகளான பிரேசில் மற்றும் கொலம்பியாவிலும், ஆப்பிரிக்காவிலும் அக்கிருமி பரவியது. ஜிகா வைரஸ், தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவை சேர்ந்த 23 நாடுகளில் தாக்கியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.