தொடர் உயிரிழப்பை தடுக்க ‘மலேரியா தடப்பூசி முகாம்’ அறிமுகம்!

மலேரியாவால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் விதமாக, மலாவி நாட்டில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் முகாம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது!

Last Updated : Apr 24, 2019, 08:10 PM IST
தொடர் உயிரிழப்பை தடுக்க ‘மலேரியா தடப்பூசி முகாம்’ அறிமுகம்! title=

மலேரியாவால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் விதமாக, மலாவி நாட்டில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் முகாம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது!

கொடிய உயிர்கொல்லி நோய்களுல் ஒன்றாக கருதப்படும் மலேரியா நோயை தடுக்கும் விதமாக இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. RTS,S என அறியப்படும் இந்த தடுப்பூசி தற்போது கிழக்கு ஆப்பிரிக்காவின் மலாவி நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

மலேரியா நோய் ஆண்டுக்கு சுமார் 435,000 உயிரிழப்பு ஏற்படுவதாக கூறும் உலக சுகாதார அமைப்பு  இந்த முகாமை தற்போது மலாவியில் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆப்பிரக்காவில் மட்டும் ஆண்டிற்கு 250000 உயிர்களை பலி வாங்குவதாகவும் தெரிவிக்கிறது. இயற்கை நிறைந்த பூமியாக கருதப்படும் மாலாவி நாட்டில் மட்டும் இதுவரை மூவாயிரம் பேர் மலேரியாவால் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.  

இவற்றை தடுக்கும் விதமாக மாலாவியில் உள்ள சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமில், குழந்தைகளுக்கு மலேரியா தடுப்பூசி போடப்பட்டது. வரும் வாரங்களில் காங்கோ மற்றும் கென்யா நாட்டில் இந்த முகாம் அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிம்பாபே உள்ளிட்ட ஒருசில நாடுகளில் மலேரியா உயிர்கொல்லி நோயாக கருதப்படுகிறது. இந்த கொடிய நோயை தடுக்க கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள முதல் தடுப்பூசியாக RTS,S கருதப்படுகிறது. இந்த RTS,S ஆனது 30 ஆண்டுகளின் கடும் முயற்சியின் பலனாய் கருதப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக இந்த தடுப்பூசி கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மலேரியா பாதிப்புக குழந்தைகளில் கனிசமாக குறைந்துள்ளது எனவும் உலக சுகாதார நிலையம் தெரிவிக்கிறது.

Trending News