2022-ல் வாட்ஸ்சப்பில் வரவிருக்கும் புதிய அம்சங்கள்!

வாட்ஸ் அப்பின் புதிய அம்சங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் வரவிருக்கிறது.

 

1 /5

ஒருவருக்கு ஒரு மெசேஜை அனுப்பிய பிறகு அதனை எடிட் செய்து மாற்றியமைக்கக்கூடிய அம்சத்தை வழங்கவிருக்கிறது.  இதன் மூலம் எழுத்து பிழைகள் போன்றவற்றை சரிசெய்து கொள்ளமுடியும்.

2 /5

டிஸ்அப்பியரிங் மெசேஜ்களை சேமித்து வைக்கக்கூடிய அம்சங்களையும் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் வழங்கவுள்ளது.  

3 /5

வாட்ஸ் அப் பிசினஸ் பயணர்களுக்காக 'வாட்ஸ்அப் பிரீமியம்' அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  பிசினஸை ஊக்குவிக்கும் வகையில் 10 சாதனங்களுடன் இணைக்கும் வசதியையும் வழங்கவுள்ளது.  இந்த சப்ஸ்க்ரிப்ஷனிலிருந்து பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் விலகி கொள்ளலாம்.

4 /5

வாட்ஸ் அப் குரூப்பிலிருந்து விலகினால், அந்நபர் விலகியது குறித்த செய்தி மற்ற உறுப்பினர்களுக்கு தெரியாது.  இந்த செய்தி குரூப் அட்மினுக்கு மட்டுமே காண்பிக்கப்படும்.  டெஸ்க்டாப் பீட்டா வெர்ஷன் 2.221.8.1ல் இந்த மாசம் கண்டறியப்பட்டுள்ளது.  

5 /5

வாட்ஸ்அப்பின் ஐஓஎஸ் பீட்டா வெர்ஷனில் 'டீடெய்ல்ட் ரியாக்ஷன் இன்ஃபோ ஃபார் ஆல்பம்ஸ்' என்கிற அம்சம் அறிமுகப்படுத்தவுள்ளது.  யாரெனும் ஆல்பத்திலுள்ள போட்டோ அல்லது வீடியோவிற்கு ரியாக்ட் செய்ய்திருந்தால், எந்த மீடியாவிற்கு ரியாக்ட் செய்யப்பட்டு இருப்பதை என்பதை காண நீங்கள் ஆல்பத்தை திறக்க வேண்டும்.