காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க தவறினால், மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று ஈரோட்டில் நடைபெற்ற மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நடிகர் கமல்ஹாசன், இன்று தனது அரசியல் பயணத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டிற்கு சென்று துவக்கினார். மேலும் மதுரையில், இன்று இரவு நடைபெறும் பொதுக்கூட்டத்தில், தன் கட்சியின் பெயரையும், கொடியையும், கமல் அறிவிக்கவுள்ளார்.
நேற்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை தனது இல்லத்தில் சந்தித்து பேசிய பிறகு நடிகர் கமல்ஹாசன் கூறியது, தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன், தமிழகத்தில் அடுத்த 100 நாட்களில் தேர்தல் வந்தால், அதில் என்னுடைய பங்கு இருக்கும் எனவும், என்னுடைய மக்கள் சந்திப்பு பயணத்தை விரைவில் அறிவிப்பேன் என கமல்ஹாசன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
ரஜினி அரசியலுக்கு வந்தால் தமாகா வரவேற்கும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் நண்பர். அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். அதற்காக வீண் சர்ச்சைகளை கிளப்ப கூடாது என ஜி.கே. வாசன் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.
சமுக வலைதளத்தில் அவர் கூறியது, பின்வருமாறு:-
* தமிழக அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர். எந்த விஷயத்திலும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத அரசாக இந்த அரசு உள்ளது.அதேபோல எதிர்க்கட்சியும் வலுவாக செயல்படவில்லை.
மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ-க்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
நேற்று மாலை தி.மு.க. தலைமை அலுவலகத்திலிருந்து, உடனடியாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இன்று சென்னை வர வேண்டும். ஆலோசனை கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் மு.க ஸ்டாலின், திமுக எம்எல்ஏ-க்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கூர்ந்து கவனிக்க படுகிறது.
அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியை நடத்திவரும் பன்னீர்செல்வம் இல்லம் பரபரப்புடன் இருக்கிறது. அங்கு அவருடன் அவசர ஆலோசனை நடத்த நிர்வாகிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்குப்பின் சசிகலா அணி, ஓபிஸ் அணி என்று அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிக்கல் ஏற்பட்டபோதெல்லாம் இடைக்கால முதல்வராக பொறுப்பேற்றவர் ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே.
1951-ம் ஆண்டு, ஜனவரி14-ம் தேதி, பெரியகுளத்தில் பிறந்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம். இவர் பி.ஏ முடித்தபின்னர் தான் அரசியலுக்கு வந்தார்.
சென்னை ஆர்கேநகர் தொகுதி திமுக தேர்தல் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
அதில் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறியதாவது:-
ஆர்கேநகர் தொகுதியில் இதற்கு முன்பு மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வெற்றி பெற்றிருந்தார். அவர் இறந்ததால் இடைத்தேர்தல் வந்துள்ளது.
ஜெயலலிதா இதற்கு முன்பு பர்கூரிலும், ஸ்ரீரங்கத்திலும் போட்டியிட்டார். அவர் முதல் அமைச்சரான பிறகும் அந்த தொகுதிகள் முன்னேற்றம் அடைய வில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.