Tirupati Temple Stampede Latest News: திருப்பதியின் நடந்த இந்த சம்பவம் நாடு முழுதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசலின் புகைப்படங்களும், கடுமையாக காயமடைந்தவர்களின் உயிரை காப்பாற்ற அங்கிருந்த பக்தர்கள், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் காவல் துறையினர் எடுத்த முயற்சிகளின் சில வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகின்றன.
Tirupati Stampede Latest News Updates: திருப்பதியில் சொர்க்கவாசல் நிகழ்ச்சிக்கு இலவச டிக்கெட் வாங்குவதற்கு, அதிகளவு கூடிய கூட்டத்தில் சிக்கி மொத்தம் 6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் சேலத்தை சேர்ந்த மல்லிகா என்பவரும் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கார்த்திகை பூர்ணிமா விழாவையொட்டி பீகார் மாநிலத்தின் பெகுசாராய் மாவட்டத்தில் உள்ள சிமாராய் என்னும் புனித தலத்தில் கங்கை நதியில் புனித நீராடுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். அவர்கள் புனித நீராடுவதற்காக கங்கை நதியில் இறங்கி நீராடினர். அப்போது கூட்டத்தின் ஒரு பகுதியில் வதந்தி பரவியது. இதனால் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது.
ஒருவரை ஒருவர் முண்டியடித்து வெளியேற நினைத்து உள்ளனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
உத்திர பிரதேசம் வாரணாசியில் பாபா ஜெய் குருதேவ் சபா பங்கேற்ற நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 19 மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். பாபா ஜெய் குருதேவ் சபா நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் ஒருவரின் மீது ஒருவர் தள்ளு முள்ளு செய்து கூட்ட நெரிசலில் சிக்கிஉயிரிழந்தனர்.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உத்தரபிரதேச மாநில முதல்வர் அக்லேஷ் யாதவ் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு லட்சமும் (2,00,000), காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் (50,000) ருபாய் வழுங்கபடும் என அறிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.