நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போது, பல இடங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
தொற்றுநோயின் விளைவுகளால் பல சிக்கல்களில் மாட்டிக்கொண்டு பல தேவைகளுக்கு இடையில் உழலும் நபர்களிடம் செக்ஸ் சலுகை பெற முயலும் நபர்கள் நம் நாட்டிற்கு அவமானத்தைத் தேடித் தரும் அற்பர்கள் என்றால் அது மிகையாகாது.
நாடு முழுவதும் மருத்துவ ஆக்ஸிஜனின் ஒதுக்கீடு மற்றும் விநியோகத்தை கண்காணிக்க உச்சநீதிமன்றம் சனிக்கிழமை (மே 8, 2021) ஒரு தேசிய அளவிலான பணிக்குழுவை அமைத்தது.
இந்தியா முழுவதும், கொரோனா பரவலின் இரண்டாம் அலை தொடங்கி, தீயாய் தொற்று பாதிப்புகள் பரவி வருகிறது. நாடு முழுவதும், முன்பு எப்போதும் இல்லாத வகையில், தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள உற்பத்தி கூடத்தில் நாளொன்றுக்கு 500 டன் ஆக்ஸிஜன் (Oxygen) உற்பத்தி செய்ய முடியும் என்பதால், ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஆலையை இயக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தது.
காங்கிரஸ் தலைவர் திரு.அஜய் மாகேன் (Ajay Maken), மத்திய அரசை குறை சொல்லும் அதே நேரத்தில், COVID-19 தொற்றுநோய்களின் போது மக்கள் நலனிற்காக குறைந்தபட்சம் ஏதேனும் செய்ய வேண்டும் என்றார்.
மாநிலங்களின் ஆக்ஸிஜன் தேவைகளை மனதில் கொண்டு, அவற்றை விரைவில், மருத்துவமனைகளுக்கு கொண்டு சேர்க்க, ரயில்வே மற்றும் விமானப்படையை திறம்பட பயன்படுத்துவதில் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.