நாடு முழுவதும் 551ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்க PM CARES நிதியிலிந்து ஒதுக்கீடு

நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய , மாநில அரசுகள் இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 25, 2021, 04:22 PM IST
  • இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 3.5 லட்சத்தை தாண்டியுள்ளது.
  • ஆலைகள் மாவட்ட அளவில் ஆக்ஸிஜன் கிடைக்கும் வகையில் செயல்படும்.
  • இந்த ஆலைகள், மிக குறுகிய காலத்தில், மிக விரைவில் நிறுவப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 551ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்க PM CARES நிதியிலிந்து ஒதுக்கீடு title=

இந்தியாவில், முன்பு எப்போதும் இல்லாத வகையில், தினசரி தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 3.5 லட்சத்தை தாண்டியுள்ளது. 

இந்நிலையில் நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய , மாநில அரசுகள் இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், பிரதமர் அலுவலகம் (PMO) 551 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை நிறுவ, பிஎம் கேர்ஸ் (PM Cares) நிதியிலிருந்து, நிதி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டில், அரசு மருத்துவமனைகள் மற்றும் பொது சுகாதார மையங்களில் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் நிறுவப்படும். இந்த ஆலைகள் மாவட்ட அளவில் ஆக்ஸிஜன் கிடைக்கும் வகையில் செயல்படும். இந்த ஆலைகள், மிக குறுகிய காலத்தில், மிக விரைவில் நிறுவப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ALSO READ | கொரோனா காலத்தில் உங்கள் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 மருத்துவ கருவிகள்

இந்தியா முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை எழுந்துள்ள நிலையில் நாடு முழுவதும் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்க, மிக விரவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்தியாவில் கொரோனா பரவல் நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டும் வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மே ஒன்றாம் தேதியிலிருந்து, 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் கொரோனா தடுப்பூசி ( Corona Vaccine) செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. 

ALSO READ | விளம்பரத்திற்கு ₹822 கோடி; ஆக்ஸிஜன் ஆலைக்கு ₹0; அரவிந்த் கேஜரிவாலை சாடும் காங்கிரஸ் 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News