ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) மருத்துவ தேவைக்கான திரவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக மாறியுள்ளது. தற்போது, இந்தியாவின் மொத்த மருத்துவ ஆக்ஸிஜன் தயாரிப்பில் 11 சதவீதத்திற்கும் அதிகமான உற்பத்தியை மேற்கொள்கிறது.
தினமும் சராசரியாக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தினமும்,1000 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை (Oxygen) உற்பத்தி செய்து அதனை இலவசமாக வழங்குகிறது.
இந்த மாத தொடக்கத்தில், ரிலையன்ஸ் தனது குஜராத் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து ஆக்ஸிஜனை இலவசமாக மகாராஷ்டிராவுக்கு அனுப்பத் தொடங்கியது.
ALSO READ | கொரோனா நோயாளிகள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் Prone Positioning
முதலில், ஒரு நாளைக்கு 100 மெட்ரிக் டன் என்ற அளவில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்ஸிஜன், ஒரு வாரத்திற்குப் பிறகு இது ஒரு நாளைக்கு 700 மெட்ரிக் டன் ஆக உயர்த்தப்பட்டது, இப்போது, மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் போன்ற பிற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இப்போது மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி திறன் ஒரு நாளைக்கு 1000 மெட்ரிக் டன் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
2021 ஏப்ரல் மாதத்தில், ரிலையன்ஸ் 15,000 மெட்ரிக் டன் மருத்துவ தர திரவ ஆக்ஸிஜனை இலவசமாக வழங்கியது, இதன் மூலம் கிட்டத்தட்ட 15 லட்சம் கொரோனா வைரஸ் நோயாளிகள் பயனடைந்தனர் ”என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அதன் தனிப்ட்ட உள் பயன்பாட்டிற்காக உள்ள ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆக்ஸிஜன் ஆலை உள்ளது. ஆனால் இப்போது அந்த ஆலையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, தினசரி 1000 மெட்ரிக் மருத்துவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன.
இது தவிர ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்காக 24 ISO கன்டெய்னர்களை வெளிநாடுகளில் இருந்து வாங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு கூடுதலாக 500 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து திறனை உருவாக்குகிறது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ALSO READ | கொரோனா காலத்தில் உங்கள் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 மருத்துவ கருவிகள்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR