ஒடிசாவின் ரௌர்கெலா சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார் மூன்று பேர் பயங்கர காயங்களுடன் மீட்கப்பட்டனர்!
இன்று காலை ஒடிசாவின் ரௌர்கெலா பகுதியில் பட்டாசு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், அப்பகுதி பெரும் சேதம் அடைந்துள்ளது. இச்சம்பவத்தில் ஒருவர் பலியானார் மூன்று பேர் காயமடைந்துள்ளார என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒடிசா மாநிலம் நெர்கண்டி ரயில் நிலையம் அருகே இன்று காலை சரக்குகளை ஏற்றி வந்துகொண்டிருந்த சரக்கு ரயில் திடீரென தடம் புரண்டது. இந்த விபத்தில் ரயிலின் 16 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழிறங்கி சரிந்தது.
Odisha: At around 4 am today 16 coaches of a goods train derailed near Nergundi station. Rail traffic affected. pic.twitter.com/SzMlB8XxqB
— ANI (@ANI) September 27, 2017
பிரித்வி-II ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. பிரித்வி-II வகை ஏவுகணை சுமார் 350 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்துச் சென்று தாக்கும் சக்தி கொண்டது.
பிரித்வி-II ரக ஏவுகணைகள் ராணுவ பயன்பாட்டுக்காக கடந்த 2003 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டு விட்டது. என்றாலும் இது அடிக்கடி சோதனை செய்யப்பட்டு வருகிறது.
ஒடிசாவில் உள்ள நந்தன்கனன் உயிரியல் பூங்காவில் பிறந்த புலிக்குட்டிக்கு பாகுபலி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த உயிரியல் பூங்காவில் உள்ள மூன்று ஜோடி புலிகளுக்கு சில நாட்களுக்கு முன்பு ஏழு புலிக்குட்டிகள் பிறந்தன.
இந்த குட்டிகளுக்கு பெயர் வைக்க ஒரு ஆலோசனை பெட்டி செய்யப்பட்டது அதில் சுமார் 400 பெயர்களை பார்வையாளர்கள் தெரிவித்திருந்தனர். அதில் 30-க்கும் மேற்பட்டோர் பாகுபலியின் பெயரை வைக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். அதே அளவு தேவசேனாவின் பெயருக்கும் பார்வையாளர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர்.
அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று எதிரிகளின் இலக்குகளை அழிக்கும் இந்த 'அக்னி-4' ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடந்தது.
இந்தியா 1.5 டன் எடையை சுமந்துச் செல்லக்கூடிய வகையில் 17 மீட்டர் நீளம் கொண்ட 'அக்னி-4' ரக ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று எதிரிகளின் இலக்குகளை அழிக்கும் இந்த 'அக்னி-4' ஏவுகணைகள் சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை, கண்டம்விட்டு கண்டம் பாய்ந்துச் சென்று தாக்கும் வல்லமை கொண்டது. இதனை இந்திய பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது.
ஒடிசாவின் கலாஹன்டி மாவட்டத்தைச் சேர்ந்த தானா மஜ்கி என்பவரின் மனைவி காசநோயால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இவர் ஆகஸ்ட் 23-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் மனைவியின் உடலை 60 கி.மீ., தொலைவில் இருக்கும் தனது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்காக ஆம்புலன்ஸ் உதவி கேட்டுள்ளார் மஜ்கி. அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை.
இஸ்ரேல் உதவியுடன் மேம்படுத்தப்பட்ட புதிய ஏவுகணையை இந்தியா இன்று ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாக பரிசோதித்தது. ஒடிசா கடற்கரையில் உள்ள சந்திப்பூர் ஏவுதளத்தில் மொபைல் லாஞ்சர் மூலமாக ஏவுகணை ஏவப்படது. இந்த ஏவுகணை இலக்குகளை மிக துல்லியமாக தாக்கி அழித்ததாக ராணுவ மேம்பாட்டு ஆராய்ச்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.