டி.டி.வி தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். இதனையடுத்து வரும் தேர்தல்களில் தனக்கு நிரந்தரமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் எனவும், தான் பரிந்துரைத்த மூன்று பெயர்களில் ஏதேனும் ஒரு பெயரை கட்சிக்கு ஒதுக்க வேண்டும் எனவும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
நடிகர் கமல்ஹாசன், இன்று தனது அரசியல் பயணத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டிற்கு சென்று துவக்கினார். மேலும் மதுரையில், இன்று இரவு நடைபெறும் பொதுக்கூட்டத்தில், தன் கட்சியின் பெயரையும், கொடியையும், கமல் அறிவிக்கவுள்ளார்.
சென்னை கேளம்பாக்கத்தில் கமல் பிறந்த நாள் விழா மற்றும் நற்பணி இயக்கத்தின் 39-வது ஆண்டுவிழா நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் கமல்ஹாசன்,
37 வருட உழைப்பு பஞ்சுமிட்டாய் போல காணாமல் போனதாக உணர்கிறேன். ரசிகர்களின் உற்சாகத்தை மடைமாற்றம் செய்திருக்கிறேன். பணக்காரர்கள் மட்டும் முறையாக வரி கட்டினால் போதும். நாடு ஓரளவு சரியாகிவிடும்.
இயற்கையின் சீற்றத்துக்கு ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் தெரியாது. பேரழிவு வரும் வரை பொறுமையாக இருக்க வேண்டுமா? வரும் முன் காக்கும் நிலை வர வேண்டும்.
சமாஜ்வாதி கட்சி பொறுப்பை மகன் அகிலேஷ் கைப்பற்றியதை அடுத்து, கட்சி பணிகளில் இருந்து முலாயம் சிங் ஒதுங்கி இருந்து வந்தார். இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி துவங்கப்பட்டதன் 25 வது ஆண்டு விழாவை முன்னிட்டு மாநில மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டிற்கு முலாயம் சிங்கிற்கோ, அவரது சகோதரர் சிவ்பாலுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனையடுத்து லோக்தல் கட்சியை இணைத்து புதிய அரசியல் கட்சியை துவக்க முலாயம் முடிவு செய்து இருந்தார். இதற்கான அறிவிப்பை முலாயம் இன்று வெளியிட போவதாக முன்னதாக அறிவித்து இருந்தார்.
நான் இருக்கும் இடத்தில் ஊழல் இருக்காது. ஊழல் இருக்கும் இடத்தில் நான் எப்பொழுதும் இருக்க மாட்டேன் என நடிகர் கமல்ஹாசன் தனது பேட்டியில் கூறியுள்ளார். மேலும் நான் அரசியலுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டால், தனி கட்சி மட்டுமே தொடங்குவேன். எந்த கட்சியிலும் இணைய மாட்டேன். அப்படி ஒரு எண்ணம் என்னிடம் இல்லை.
தமிழ்நாட்டில் இருந்து மாற்றம் கொண்டு வர விருப்பபடுகிறேன். அதற்கு சிறிது காலம் ஆகலாம். சரியான நேரம் அமையும் பட்சத்தில் மாற்றம் தொடங்கப்படும் என தனது பேட்டியில் நடிகர் கலம்ஹாசன் கூறினார்.
ரஜினிகாந்த் பிறந்த நாளில் புதிய கட்சி அறிவிப்பு வெளிவரும் என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்தபோது, “சூழ்நிலை ஏற்பட்டால் அரசியலுக்கு வருவேன். போருக்கு தயாராக இருங்கள்” என்று சூசகமாக அறிவித்ததில் இருந்து தமிழக அரசியல் கட்சிகள் பரபரப்பாகி எதிர்ப்பு, ஆதரவு குரல்கள் எழுப்பி வருகின்றன.
எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளர் தீபாவின் கணவர் மாதவன் இன்று புதிய கட்சி துவங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். ஆனால், அந்த அமைப்பின் நிர்வாகிகள் நியமனத்தில் அவருக்கும், அவரது கணவர் மாதவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏப்ரல் 21-ம் தேதி புதிய கட்சி துவங்கப் போவதாக, கடந்த சில நாட்களுக்கு முன் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த மாதவன் அறிவித்தார்.
சென்னை தியாகராயநகரில் உள்ள தீபாவின் வீட்டிற்கு திரண்டு வந்த ஆதரவாளர்கள் தீவிர அரசியலுக்கு வரவேண்டும், புதிய கட்சி தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். தீபாவையும் அவரது கணவர் மாதவனையும் சந்தித்து உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் தெரிவித்தனர். அதற்கு தீபா எம்.ஜி.ஆர். பிறந்தநாளில் முக்கிய முடிவை அறிவிப்பேன் என்று தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.