மக்கள் நீதி மய்யம் கட்சியை விட்டு விலகிய மகேந்திரனை தங்கள் கட்சியில் சேர்க்க பாஜக, திமுக என இரு கட்சிகளுமே முயற்சி செய்தன. கட்சியிலும், மக்களிடமும் மகேந்திரனுக்கு உள்ள செல்வாக்கே இதற்கு முக்கிய காரணமாகும்.
மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்த மக்கள் நீதி மய்யம் கட்சி, தேர்தலில் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தது. இதைத் தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து மகேந்திரன், சந்தோஷ் பாபு, முருகானந்தம் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகினர்.
மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், சட்டசபை உறுப்பினர்களாக பதவியேற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தில் ஜனநாயகமே இல்லை என்றும் தேர்தலில் பெற்ற தோல்விக்குப் பிறகும் கூட கமல்ஹாசனின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், இந்த காரணங்களால் தான் கட்சியில் இருந்து விலகுவதாக மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் பிஜேபியின் வானதி சீனிவாசன் வெற்றி, MNM கமலஹாசன் தோல்வி. இன்று காலையில் தொடங்கியது முதலே வானதிக்கும், கமலஹாசனுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் சொற்ப எண்ணிக்கையிலேயே இருந்தது
இந்த கிராமத்து மக்களுக்கு போக்குவரத்து ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. பிக்-அப் வாகனத்தை நம்பித்தான் அவர்கள் இருக்கிறார்கள். பிக்-அப் வாகனங்கள் மூலம் மக்கம்பாளையத்தை அடைந்து பின்னர் தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழக பேருந்துகள் மூலம் அந்தியூரில் உள்ள அரசு அலுவலகங்களை அவர்கள் அடைய வேண்டும்.
தி.மு.க இந்த முறை ஆட்சியைப் பிடிக்கும் என்று ஏபிபி சிவோட்டர் கருத்துக் கணிப்பு 2021 தெரிவித்துள்ளது. எதிர்வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என ABP CVoter கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இது அதிமுக-பாஜக கூட்டணிக்கு பின்னடைவாக இருக்கலாம் என்று கூறுகிறது.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ .45.09 கோடியாகவும், அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ .131.84 கோடியாகவும் உள்ளது.
அதிமுக-வின் மிகப்பெரிய ஆளுமையாக, மக்கள் மனதில் அசைக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா இல்லாமல் கட்சி போட்டியிடும் முதல் தேர்தலாகும் இது.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழக சட்டசபை தேர்தலில் 234 சட்டசபை தொகுதிகளில் 154 இல் போட்டியிடும். மீதமுள்ள 80 இடங்களை அதன் இரு கூட்டணி கட்சிகளான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு மக்கள் நீதி மய்யம் ஒதுக்கியுள்ளது.
தமிழர்களின் பெருமையை பற்றி பேசி தமிழர்களை தங்களுக்கு வாக்களிக்க வைக்கலாம் என பாஜக கருதுவதாகவும், இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாக அதிமுக அரசாங்கம் அளித்த வாக்குறுதி இன்னும் தொலைதூர கனவாகவே உள்ளது என்றும் கமல்ஹாசன் குற்றம் சாட்டினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.