MNM மதுரவயல் வேட்பாளர் பத்மப்ரியா முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

டாக்டர் மகேந்திரன் திமுகவில் இணைந்ததை அடுத்து தற்போது கமலஹாசனின் கட்சியில் இருந்து விலகிய பத்மப்ரியாவும் திமுகவில் இணைந்திருக்கிறார்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 8, 2021, 09:09 PM IST
  • மக்கள் நீதி மய்யத்தில் இருந்து தலைவர்கள் தொடர்ந்து வெளியேற்றம்
  • மநீம மதுரவயல் வேட்பாளர் பத்மப்ரியா திமுகவில் இணைந்தார்
  • முன்னதாக டாக்டர் மகேந்திரன் திமுகவில் இணைந்தார்
MNM மதுரவயல் வேட்பாளர் பத்மப்ரியா முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்  title=

சென்னை: மக்கள் நீதி மய்யத்தில் இருந்து தலைவர்கள் வெளியேறுவது தொடர்கதையாகிவிட்டது. டாக்டர் மகேந்திரன் திமுகவில் இணைந்ததை அடுத்து தற்போது கமலஹாசனின் கட்சியில் இருந்து விலகிய பத்மப்ரியாவும் திமுகவில் இணைந்திருக்கிறார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலகினார்கள். மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட சுற்றுசூழல் ஆர்வலர் பத்மப்ரியாவும் கட்சியில் இருந்து விலகினார்.

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தாலும், இதுவரை அவர் வேறு எந்த கட்சியிலும் இணையாமல் இருந்தார். இன்று அவர், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார்.டாக்டர் மகேந்திரன் திமுகவில் இணைந்ததை அடுத்து தற்போது பத்மபிரியாவும் திமுகவில் இணைந்திருக்கிறார்.

Also Read | முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மநீம நிர்வாகி மகேந்திரன் திமுகவில் இணைந்தார்  

திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கிய நடிகர் கமலஹாசன் முதலில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். வெற்றி பெறாவிட்டாலும், கணிசமான வாக்குகளை பெற்றதால் அரசியல் தளத்தில் கட்சிக்கான எதிர்காலம் இருப்பதாக நம்பிக்கை ஏற்பட்டது.  முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தனர்.

ஆனால் தமிழக சட்டமன்றத் தேர்தலில், ஒரு தொகுதியில் கூட கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. இதனால், முக்கிய நிர்வாகிகள் அனைவரையும் ராஜினாமா செய்யுமாறு கமலஹாசன் உத்தரவிட்டார். அதன்படி, கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன், சந்தோஷ்பாபு சமூக ஆர்வலர் பத்மப்ரியா ஆகியோர் விலகினர். 

மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்ற பத்மப்ரியா மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகும்போது, ”சில காரணங்களுக்காக, கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை என் தொகுதி மக்களுடன் பகிர்ந்துக் கொள்வது எனது கடமை. என்னுடைய களப்பணி எப்போதும் போல, இன்னும் சிறப்பாக தொடரும். எவ்வித அரசியல் பின்புலம் இல்லாத, ஒருநடுத்தர குடும்ப பெண்ணை, உங்கள் வீட்டுப் பிள்ளையாக எண்ணி ஏற்று, ஊக்கம் கொடுத்த மக்களுக்கு நன்றி” என கூறியிருந்தார்.

எனவே, பத்மப்பிரியா எந்த கட்சியிலும் இணையமாட்டார் என்று அனைவரும் நினைத்த நிலையில், இன்று அவர் திமுகவில் இணைந்துள்ளார்.

Also Read | Tamil Nadu BJP Head: தமிழக பாஜகவின் தலைவரானார் அண்ணாமலை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News