ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அவர், இந்திய நாட்டின் 14-வது குடியரசு தலைவராகிறார்.
522 பாராளுமன்ற உறுப்பினர்கள் என்டிஏ வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தனர். எதிர்க்கட்சிக்கு 22 எம்.பிக்கள் வாக்களித்தனர். 21 பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அவர், இந்திய நாட்டின் 14-வது குடியரசு தலைவராகிறார்.
மொத்தமுள்ள 10,98,882 வாக்குகளில் 7,02,644 லட்சத்துக்கு மேல் வாக்குகளை பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளார். தே.ஜ கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகளின் சார்பில் மீரா குமாரும் போட்டியிட்டனர். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் முடுவுக்கு வந்த நிலையில் இந்திய நாட்டின் 14வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஜனாதிபதி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போது நிலவரப்படி மீரா குமாரை விட அதிக வாக்குகள் பெற்று ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் உள்ளார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவுக்கு வரும் நிலையம் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 17-ம் தேதி அன்று நடைபெற்றது.
இந்த ஓட்டு எண்ணிக்கை இன்று (ஜூலை 20) எண்ணப்பட்டு. மேலும் இதற்க்கான முடிவு இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது. 99% வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. மாநிலங்களில் வாக்களித்த வாக்குப் பெட்டிகள் அன்றைய தினமே விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட்டன.
ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று நாடு முழுவதும் நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள சட்டசபை வளாகத்தில் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் ஓட்டுக்களை செலுத்தி வருகின்றனர்.
ஜூலை 20-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
தமிழக சட்டசபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமி முதல் வாக்கை பதிவு செய்தார்.
ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார்.
கேரளாவை சேர்ந்த ஐ.யூ.எம்.எல். கட்சி எம்.எல்.ஏ அப்துல்லா சென்னையில் வாக்களித்தார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று நாடு முழுவதும் நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள சட்டசபை வளாகத்தில் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் ஓட்டுக்களை செலுத்தி வருகின்றனர்.
ஜூலை 20-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடியில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் பலர் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்தனர்.
புதிய ஜனாதிபதி 25-ம் தேதி பதவி ஏற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று நாடு முழுவதும் நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள சட்டசபை வளாகத்தில் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் ஓட்டுக்களை செலுத்தி வருகின்றனர்.
ஜூலை 20-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
முலாயம், ஷிவ்பால் ராம்நாத் கோவிந்திற்கு வாக்களிப்பு.
ஆந்திரா முதல்வர் சி.சந்திரபாபு நாயுடு அமராவதியில் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு வாக்களிக்கிறார்.
வரும் 17-ம் தேதி நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்தும், எதிர்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மீரா குமாரும் இன்று சென்னை வருகின்றனர்.
இருவரும் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகளின் எம்.பி., எம்எல்ஏக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ராம்நாத் கோவிந்த், மீராகுமார் இருவரும் இன்று ஒரே நாளில் சென்னை வருகின்றனர்.
ராம்நாத் கோவிந்த்:
தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இன்றுடன் மனு தாக்கல் நிறைவடைகிறது.
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. மனு தாக்கல் கடைசி நாள் 28-ம் தேதி.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.