கேரளா முழுவதும் கோவிட் -19 தொற்று பாதிப்புகள் தொடந்து அதிகரித்து வரும் நிலையில், கேரளாவில் இரண்டு வார கால இரவு நேர ஊரடங்கு உத்தரவை மாநில அரசு திங்கள்கிழமை (ஏப்ரல் 19) அறிவித்தது.
கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலையின் தாக்கத்தால் உலகமே ஆடிப் போயிருக்கும் நிலையில் தமிழகத்திலும் அதன் பாதிப்புகள் துரிதகதியில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் சில நாட்களுக்கு முழு ஊரடங்கு போடப்படுமா என்ற கேள்வி பலரிடம் உள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைப் பற்றி ஆய்வு செய்ய நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேற்று சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
கொரோனா நோய் பர்வல் அதிகரித்து வருவதை அடுத்து தமிழக அரசு புதிய கட்டுப்பாடு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. ஏப்ரல் 20 முதல் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (Confederation Of All India Traders - CAIT), தேசிய தலைநகரில் அடுத்த 10 நாட்களுக்கு முழுமையான பொது முடக்கத்தை அமபல்படுத்த வேண்டும் என அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
புதன்கிழமையன்று தில்லியில் ஒரே நாளில் 17,282 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். 104 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்தியாவில் புதன்கிழமை COVID-19 நோய்த்தொற்று காரணமாக 1,033 பேர் இறந்தனர்.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணமாக மகாராஷ்டிராவில் ஊரடங்கு விதிக்கப்பட்டாலும், ஐ.பி.எல் (IPL 2021) போட்டிகள் மும்பையிலேயே நடைபெறும் என்று பி.சி.சி.ஐ (BCCI) தெளிவுபடுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் மிக அதிகமாக கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் மகாராஷ்டிராவின் நந்தூர்பார் மாவட்டத்தில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளது. அதாவது ஏப்ரல் 15 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.
ஏற்கனவே போடப்பட்ட கொரோனா பொது முடக்கத்தால் வேலையிழந்த மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட நிதி இழப்புகளில் இருந்து இன்னும் அவர்கள் மீட்கப்படவில்லை. இன்றும் பலர் வேலையில்லாமல் உள்ளனர். அரசாங்கம் மீண்டும் பொதுமுடக்கம் அறிவித்தால் வேலையின்மை மீண்டும் அதிக அளவில் அதிகரிக்கும்" என்கிறார் சுனிட்டி.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.