Tamil Nadu Corona Update: தமிழகத்தில் கொரோனாவுக்கு 44 பேர் பலி, பாதிப்பு சுமார் 11000

 கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலையின் தாக்கத்தால் உலகமே ஆடிப் போயிருக்கும் நிலையில்  தமிழகத்திலும் அதன் பாதிப்புகள் துரிதகதியில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Apr 20, 2021, 07:01 AM IST
  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்
  • பாதிப்பு எண்ணிக்கை 11000
  • உயிரிழப்பு 44
Tamil Nadu Corona Update: தமிழகத்தில் கொரோனாவுக்கு 44 பேர் பலி, பாதிப்பு சுமார் 11000  title=

சென்னை: கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலையின் தாக்கத்தால் உலகமே ஆடிப் போயிருக்கும் நிலையில்  தமிழகத்திலும் அதன் பாதிப்புகள் துரிதகதியில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இடம் பெற்றுள்ள விவரங்கள்:  

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 9 ஆயிரத்து 533 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 6,572 ஆண்கள், 4,369 பெண்கள் என மொத்தம் 10 ஆயிரத்து 941 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

இந்த பட்டியலில் வெளிநாட்டில் இருந்து வந்த இருவரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 23 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 406 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1,499 முதியவர்களும் இடம்பெற்று உள்ளனர்.  

Also Read | Lockdown அச்சத்தில் தமிழகத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 9 லட்சத்து 56 ஆயிரத்து 848 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 10 லட்சத்து 2 ஆயிரத்து 392 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 6 லட்சத்து 5 ஆயிரத்து 147 ஆண்களும், 3 லட்சத்து 97 ஆயிரத்து 209 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 36 பேரும் அடங்குவர். 

அதில் 12 வயதுக்கு உட்பட்ட 36 ஆயிரத்து 324 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 39 ஆயிரத்து 731 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 22 பேரும், தனியார் மருத்துவமனையில் 22 பேரும் என 44 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்து உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 13 ஆயிரத்து 157 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 6,172 பேர் குணமாகியுள்ளனர்.  

கொரோனா பரவாமல் தடுக்க, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, மாஸ்க் அணிவது, வெளியில் செல்வதை தவிர்ப்பது உட்பட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மக்கள் எடுக்க வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Also Read | சென்னையில் உணவகங்களில் இனி பார்சலுக்கு மட்டுமே அனுமதி

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News