சென்னை: கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து தமிழக அரசு புதிய கட்டுப்பாடு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். ஏப்ரல் 20 முதல் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் (Coronavirus) பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை இல்லாத அளவில் தேசிய அளவில் ஒரே நாளில் 2,00,000த்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,50,00,000க்கும் அதிகமாகிவிட்டது.
மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு 10 மணி முதல் காலை 4.00 மணி வரை ஊரடங்கு (NIght Curfew) அமல்படுத்தப்படும். அந்த சமயத்தில் தனியார் மற்றும் பொது பேருந்து போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகத்திற்கு அனுமதியில்லை.
தமிழ்நாடு அரசு வெளியிட்ட புதிய கோவிட் நெறிமுறைகளில் இவை பொதுவானவை...
Also Read | சென்னையில் உணவகங்களில் இனி பார்சலுக்கு மட்டுமே அனுமதி
மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
ஏற்காடு,ஊட்டி,கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு செல்லத் தடை.
மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி கிடையாது
+2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்.
ஊராடங்கு காலத்தில் உணவகங்கள் இயங்காது, ஆனால் உணவை பார்சல் வாங்கிச் செல்லலாம்.
Also Read | சென்னையில் உணவகங்களில் இனி பார்சலுக்கு மட்டுமே அனுமதி
அவசர மருத்துவ தேவைகளுக்கும், விமான நிலையம், ரயில் நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி, மற்றும் தனியார் வாகன உபயோகத்திற்கு அனுமதி உண்டு.
ஊடகதினரும், பத்திரிகை துறையினரும் இரவிலும் செயல்படலாம்
பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் செயல்பட அனுமதி உண்டு.
மீன் மார்க்கெட், காய்கறி கடைகள் ,சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து கடைகளும் செயல்பட அனுமதியில்லை. கோவிட் நெறிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
Also Read | புதுச்சேரியில் கொரோனா மருந்து தட்டுபாடு ஏதும் இல்லை: டாக்டர். தமிழிசை சவுந்தரராஜன்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR