தமிழகத்தை ஆறு முறை ஆட்சி செய்த செல்வி ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இரும்பு பெண்மணி என்று பெயர் பெற்ற செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இயற்கை எய்தினார்.
உச்சநீதிமன்றத்தில் 69% இடஒதுக்கீடு (69% Reservation) வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவ படிப்பான MBBS, BDS சேர்ந்த மாணவர்களுக்கு கட்டணத்தை செலுத்த 16 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் அசுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையிலான ஒரு மத்திய அமைச்சர் குழு தமிழ்நாட்டில் நிவர் புயல் சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்யவுள்ளது.
நிவர் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடங்களையாவது ஒதுக்கித் தாருங்கள். முன்னர் அறிவித்தபடி தி.மு.கழகம் அந்தக் கட்டணத்தை ஏற்கத் தயாராக இருக்கிறது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நிவர் புயலை எதிர்க்கொள்ளும் விதமாக ஏற்கனவே இன்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில், நாளை மேலும் 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், வில்லுபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ஏழு மாவட்டங்கள் சூறாவளி புயல் காரணமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும் பஸ் போக்குவரத்து நிறுத்தம் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
வடக்கு டெல்டா மாவட்டங்களான தமிழ்நாடு (Tamil Nadu) மற்றும் புதுச்சேரி (Puducherry) முழுவதும் பலத்த மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 65 கி.மீ வேகத்தில் காற்றின் வேகம் மற்றும் வழக்கத்தை விட இரண்டு மீட்டர் உயரமுள்ள அலைகள் ஆகியவை அடுத்த இரண்டு நாட்களில் கடலோரப் பகுதிகளுக்கு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.