மகாபாரதத்தை இழிவுபடுத்தியதாக வழக்கு நடிகர் கமல்ஹாசன் ஆஜராக வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவு
மகாபாரதத்தை இழிவுப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் கமல்ஹாசன் நேரில் ஆஜராக வேண்டும் என வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு நடிகர் கமல்ஹாசன் சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர், மகாபாரதம் பற்றி சில கருத்துகளை கூறினார்.
அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வரும் 19-ம் மற்றும் 20-ம் தேதிகளில் நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு சட்ட விரோத பணப்பரிவர்த்தனை குற்றங்களுக்காக டிடிவி தினகரன் மீது அமலாக்கத் துறை 2 வழக்குகளை பதிவு செய்தது. இதையடுத்து, தினகரனுக்கு 28 கோடி ரூபாய் அமலாக்கத்துறை அபராதம் விதித்தது.
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் வரும் 19, 20 தேதிகளில் டி.டி.வி.தினகரன் கட்டாயமாக ஆஜராக வேண்டும் என்று சென்னை எழும்பூரில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1995 1996-ம் ஆண்டுகளில் டி.டி.வி.தினகரனின் வங்கிக் கணக்குகளில் வெளிநாட்டில் இருந்து பெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டதால் அவர் மீது அந்நியச் செலாவணி மோசடி வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்தது. இதையடுத்து, தினகரனுக்கு 28 கோடி ரூபாய் அமலாக்கத்துறை அபராதம் விதித்தது.
இந்த அபராதத்தை ரத்து செய்யக்கோரி டி.டி.வி.தினகரன் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர், நடிகர் தனுஷ் எங்களுடைய மகன், எங்களுக்கு வயதாகி விட்டதால் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு பொய்யானது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் நடிகர் தனுஷ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உடனடியாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு ரூ10 கோடி அபராதத்தையும் உறுதி செய்தது உச்சநீதிமன்றம். சிறை தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சசிகலா 10 வருடங்கள் தேர்தலில் நிற்கமுடியாது.
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்ததுடன், அவர்களுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு தண்டனையையும் உறுதி செய்தது.
கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்த நடிகை அமலாபால் நடித்த தெய்வதிருமகள், தலைவா ஆகிய படங்களை பிரபல பட அதிபர் ஏ.எல்.அழகப்பனின் மகன் விஜய் இயக்கினார். இந்த படங்களை இயக்கியபோது, அமலாப்பாலுக்கும், விஜய்க்கும் காதல் ஏற்பட்டது.
இருவீட்டாரின் சம்மதத்து டன் கடந்த 2014-ம் ஆண்டு கேரளாவில் கிறிஸ்துவ முறைப்படி இருவருக்கும் திருமணம் நடந்தது. பின்னர் அதே ஆண்டு, ஜூன் 12-ம் தேதி சென்னையில் உள்ள மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.
வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களை வாபஸ் பெற வலியுறுத்தி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..
சென்னை திருவான்மியூர், பழைய மகாபலிபுரம் சாலையில் முனுசாமி என்ற முதியவரை கடந்த 2-ம் தேதி அதிகாலையில் வேகமாக வந்த சொகுசு கார் அவர் மீது மோதியது. இதில், முனுசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத்தில் நடந்த கலவரத்தின்போது ''குல்பர்க் சொசைட்டி'' பகுதிக்குள் 69 பேர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.
கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் வன்முறை வெடித்தது. அப்போது வன்முறைக் கும்பல் ''குல்பர்க் சொசைட்டி'' இருந்த முஸ்லிம் 69 பேரை படுகொலை செய்தது. இந்த கொலையில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஈசன் ஜாப்ரியும் கொல்லப்பட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.