Union Budget 2021: இன்னும் சில நாட்களில் மத்திய பட்ஜெட் 2021 தாக்கல் செய்யப்படவுள்ளது. 2021 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார். வழக்கமாக, பட்ஜெட்டில், மக்கள் வருமான வரியில் நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பார்கள். ஏனென்றால் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர், மறைமுக வரி தொடர்பாக பட்ஜெட்டில் பெரிதாக மாற்றம் செய்ய எதுவும் இருப்பதில்லை.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த யூனியன் பட்ஜெட் மொபைல் செயலியை ஆண்ட்ராய்டு சாதனங்களில் உள்ள கூகிள் பிளே ஸ்டோரிலிருந்தும், iOS சாதனங்களில் உள்ள ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம்.
CBDT சமீபத்திய ஆண்டுகளில் நேரடி வரிகளில் பல பெரிய வரி சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில், பெருநிறுவன வரி விகிதங்கள் 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகவும், புதிய உற்பத்தி பிரிவுகளுக்கு விகிதங்கள் 15 சதவீதமாகவும் குறைக்கப்பட்டன.
பட்ஜெட்டின் ஆவணங்களை அச்சிடும் செயல்முறையை குறிக்கும் வழக்கமான Budget 2021 இன்று நடைபெற்றது. இந்த விழா பட்ஜெட் செயல்முறையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதை குறிக்கும் பிள்ளையார் சுழி என்றே சொல்லலாம்.
Union Budget 2021: நேரடி வரி (Direct Tax) என்பது உங்கள் வருவாய்க்கு அரசாங்கம் வசூலிக்கும் வரியாகும். அதாவது, நீங்கள் வருவாய் ஈட்டியிருந்தால், இந்த வரியை செலுத்த வேண்டும். உங்களுக்கு வருவாய் இல்லையென்றால் நீங்கள் வரி செலுத்த வேண்டாம்.
Budget 2021: மத்திய பட்ஜெட்டின் நாள் நெருங்கி வருவதால், மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. பிப்ரவரி 1 ம் தேதி நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். ராணுவ வீரர்கள், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் தங்களுக்கு இந்த பட்ஜெட்டில் ஏதாவது சிறப்பு சலுகைகள் இருக்கும் என்று அதிக நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.